‘இதனால்தான் அவர் உலகத் தலைவர்’ ; பிரதமரை உதயநிதி சந்தித்தது குறித்து அண்ணாமலை கருத்து…!!

Author: Babu Lakshmanan
4 January 2024, 9:55 pm

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த மாதம் நடக்கும் கேலோ இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் நேரில் அழைப்பு விடுத்தார். அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்பி ராகுல் காந்தி ஆகியோரையும் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்புகளுக்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்கக்கோரி முதலமைச்சர் சார்பாக பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும், ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, “பிரதமர் மோடி எப்பொழுதும் தமிழகத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பவர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ் மொழியின் அழகை பரப்பி வருகிறார்.

இதற்கு முந்தைய ஆட்சியாளர்களை விட தமிழகத்திற்கு அதிகமான நிதியை வழங்கியுள்ளார். தன்னைப் பற்றி பொய்களை மட்டுமே பரப்புவதைத் தவிர, வேறு எதுவும் செய்யாத திமுகவினரை சந்திக்கும் அன்பானவர். அதனால்தான் பிரதமர் மோடி ஒரு உலகத் தலைவர் மற்றும் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!