கடைசியா விடியல் ஆட்சி கிடைச்சாச்சு… ஆவின் பொருட்கள் மற்றும் டாஸ்மாக் விலை உயர்வு குறித்து அண்ணாமலை விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
7 March 2022, 12:52 pm

சென்னை : ஆவின் பொருட்கள் மற்றும் டாஸ்மாக் விலை உயர்வை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் மறைமுகத் தேர்தல் நடந்து முடிந்து அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்று விட்டனர். இதில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியுள்ளது.

இதனிடையே, ஆவின் பொருட்களாக நெய், தயிர் உள்ளிட்டவையின் விலையை அண்மையில் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதற்க எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுக்களின் விலையும் இன்று முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் 80 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆவின் பொருட்கள் மற்றும் டாஸ்மாக் விலை உயர்வுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, ஆவினில் உள்ள நெய் முதல் தயிர் வரையிலான பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது, டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில் முதல் பீர் வரையிலான மதுவகைகளின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இறுதியாக, திமுக அறிவித்தது போன்று தமிழகத்தில் விடியல் ஆட்சி வந்துவிட்டது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Vijay Movie Villain Neil Nitin Mukesh arrested in New york விஜய் பட வில்லன் நியூயார்க்கில் திடீர் கைது… துருவி துருவி விசாரணை.!!