முதலமைச்சரின் கூட்டங்களுக்கு ஆள்சேர்ப்பதுதான் பள்ளிக்கல்வித்துறையின் வேலையா…? அண்ணாமலை கேள்வி!!

Author: Babu Lakshmanan
24 August 2022, 1:52 pm

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டங்களுக்கு ஆட்சேர்ப்பதுதான் பள்ளிக்கல்வித்துறைக்கு வேலையா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றிரவு கோவை வந்தார். இன்று முதல் 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வர பள்ளி வாகனங்களை அனுப்பி வைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணியா? மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும் போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா? இன்று கோவையிலும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர அனைத்து பள்ளி வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ