ஒரே பொய்யா சொல்லிட்டு இருக்காங்க… நீட் கொண்டு வர காரணமே திமுகதான் : அண்ணாமலை அதிரடி பேச்சு

Author: Babu Lakshmanan
7 February 2022, 1:12 pm

கோவை : இந்தியாவில் நீட் தேர்வு கொண்டுவர காரணமாக இருந்ததே திமுகதான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை வடவள்ளி இடையார் பாளையம் பகுதியில் பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அண்ணாமலை பேசியதாவது :- கோவை மீது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திடீரென பாசம் வந்துவிட்டது. அரவக்குறிச்சி மாடல் தேர்தல் போன்று மக்களை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளது. பாஜகவை எதிர்த்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார். பொய்யை மட்டுமே சொல்லி முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

நீட்டை கொண்டு வர காரணமாக இருந்ததே திமுகதான். வேட்புமனு தாக்கலில் கூட ஆளுங்கட்சியினர் தலையீட்டால் ஒரு மாகபாரத யுத்தத்தை நடத்தி விட்டுதான் ஒவ்வொரு வேட்பாளர்களும் வந்துள்ளீர்கள். மக்களின் வீடுகளுக்கு சென்று சகோதர, சகோதரி போல பேசுங்கள். மக்கள் காலில் விழுந்து வாக்கு கேளுங்கள். கோவை தெற்கு தொகுதியில் அக்கா வானதி சீனிவாசன் தாமரையை மலர வைத்துள்ளார். தேர்தலில் அக்காவை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள், எனக் கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!