மதுரை மேலூரில் வாக்களிக்க ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்காளருக்கு அனுமதிக்க கூடாது என கூறிய பாஜக முகவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மேலூர் அல் அமின் உயர்நிலைப்பள்ளியில் செயல்பட்ட நகராட்சிக்குட்பட்ட 8- வது வார்டு வாக்குச்சாவடியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட அம்சவேணியின் மகன் கிரிநந்தன் அக்கட்சியின் பூத் ஏஜென்டாக இருந்தார். அப்போது அவர், அங்கு வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் ஹிஜாப் உடையை அகற்றிவிட்டு வந்து வாக்களிக்கும்படி கூறியுள்ளார்.
இதற்கு அங்கிருந்த திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வாக்குப்பதிவை நிறுத்தி வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாஜக ஏஜென்ட் கிரிநந்தனை காவல்துறையினர் வாக்குச் சாவடியிலிருந்து வெளியேற்றினர். பின்னர், அவருக்கு பதிலாக வேறு முகவர் நியமிக்கப்பட்டதை அடுத்து, வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில், கிரிநந்தன் மீண்டும் வாக்குச்சாவடிக்கு சென்று சண்டையிட முயற்சித்ததால், காவல்துறையினருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குச்சாவடி செயல் அலுவலர் நேதாஜி, மேலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாஜக ஏஜென்ட் கிரிநந்தன் மீது மதத்தின் உணர்வை புண்படுத்துதல் , மற்றொரு மதத்தைச் சேர்ந்தவரை இழிவுபடுத்தும் படி பேசுதல் , அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் அவரை கைது செய்தனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.