நீலகிரியை கூகுளில் தட்டினாலும் 2ஜி ஊழல் என்று தான் வருகிறது… மக்களை அவமானப்படுத்தி விட்டார் ஆ.ராசா ; எல்.முருகன் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
26 March 2024, 1:47 pm

புகழ் பெற்ற நீலகிரியை கூகுலில் தேடினால் 2-ஜி ஊழல்தான் வருவதாகவும், நீலகிரி தொகுதி மக்களை தற்போதைய எம்.பி ராசா அந்த அளவிற்கு அவமானப்படுத்தியுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியினர் சந்திப்பு கூட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றதையடுத்து, மத்திய இணையமைச்சரும், நீலகிரி பாரளுமன்ற பாஜக வேட்பாளருமான எல்.முருகன் மேட்டுப்பாளையம் வருகை தந்தார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.கவின் கூட்டணி கட்சிகளான பா.ம.க, ஐ.ஜே.கே, அமமுக, ஓபிஎஸ் அணி ஆகியோரின் உள்ளூர் பிரமுகர்களை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அரங்கில் சந்தித்து எல்.முருகன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன் கூறியதாவது :- நேற்று ஊட்டியில் வேட்புமனு தாக்கல் செய்த போது நடந்த அசௌகரியமான காரியத்துக்கு காவல்துறையின் மெத்தன போக்கும், சரியாக திட்டமிடாதலுமே காரணம். பிரதமர் நரேந்திர மோடி நீலகிரியில் பிரச்சாரம் செய்வதற்கு கோவை மற்றும் நீலகிரிக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அதிகப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு கிராமங்களிலும் பள்ளிகூடங்கள், அங்கன்வாடி போன்ற மக்களின் அடிப்படை வசதிகள் இருக்கிறதோ இல்லையோ, டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துள்ளனர். போதை பொருள் சப்ளை உள்ளது. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளான போதை கடத்தல் வழக்கில் திமுக மற்றும் விசிக நிர்வாகிகள் இருக்கிறார்கள்.

உலகின் சுற்றுலா தளங்களில் பேர் போன நீலகிரியை இன்று கூகுளில் தட்டினால் 2-ஜி என்றுதான் வருகிறது. அந்தளவு இத்தொகுதி மக்களை தற்போதைய எம்.பி அவமானப்படுத்தியுள்ளார். 2 ஜி வழக்கு தற்போது டெல்லி உயர் நீதிமன்றதால் குற்றம் நடந்துள்ளது, முழு விசாரணை தேவை என ஏற்கப்பட்டுள்ளது.

அதோடு மக்களின் இறை நம்பிக்கைகளை, பெண்களை, பட்டியலின அருந்ததியர் மக்களை தரைக்குறைவாக பேசுவதுதான் இவரது வேலையாக இருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தையும் அம்பேத்கரையும் பா.ஜ.க மதிக்கிறது. என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் பிரதமரின் தமிழக வருகைக்கு பின்னர் தமிழகத்தில் பா.ஜ.க வலுவான கூட்டணியாக உள்ளது, என்றார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்