வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறிய பாஜக வேட்பாளர்.. திருப்பூரில் மக்கள் தீர்ப்பால் சோகம்!
Author: Udayachandran RadhaKrishnan4 June 2024, 1:02 pm
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் தற்போதைய எம். பி சுப்பராயன், அதிமுக சார்பில் அருணாச்சலம், பாஜக சார்பில் கோவை கோட்ட பொறுப்பாளரும், மாநில பாஜக பொதுச்செயலாளருமான முருகானந்தம் போட்டியிடுகிறார்.
இதில் 6வது சுற்று நிலவரப்படி இ. கம்யூனிஸ்ட் 1, 37,799, அதிமுக 1,02,634 வாக்குகளும் பெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் முருகானந்தம் 52,770 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

பாஜக வேட்பாளரை விட, இந்தியா கூட்டணி வேட்பாளர் 35 ஆயிரத்து 165 வாக்குகள் முன்னிலை பெற்ற நிலையில், 7 வது சுற்று எண்ணும் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து பாஜக வேட்பாளர் முருகானந்தம் சோக முகத்துடன் வெளியேறினார்.