உதயநிதி ஆரம்பிச்சு வச்சிட்டாரு… காஞ்சி மடத்தையே இடிப்பார்களாம்..? ஆளுநரிடம் பரபரப்பு புகார் அளித்த பாஜக..!!

Author: Babu Lakshmanan
7 September 2023, 2:00 pm

சனாதனத்திற்கு எதிராக உள்ள தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபுவையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென ஆளுநர் ஆர் என் ரவியிடம் பாஜகவினர் புகார் மனு அளித்துள்ளனர்

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் தலைமையில் தமிழக ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், திமுகவினரும், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சனாதன எதிர்ப்பு பேச்சுக்களை பேசுவதும், அதே மேடையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அமர்ந்திருப்பதும், அமைச்சர்களாக பதவி ஏற்கும் பொழுது எடுத்த உறுதிமொழிக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, மிழக ஆளுநர் அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர் பாபு மீது அமைச்சர் பதவியில் இருந்து சட்டரீதியாக அவர்களை நீக்கம் செய்ய வேண்டும் என ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கரு நாகராஜன் கூறியதாவது :- வரும் 11ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகம் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசும் போது அமைதியாக மேடையில் அமர்ந்திருந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக கோரி போராட்டம் நடத்த உள்ளோம்.

டெங்கு, மலேரியா போன்றது சனாதனம். அதை ஒழிக்க வேண்டுமென உதயநிதி பேசியுள்ளார். முன்னதாக, இந்துக்கள் என்று சொன்னால் நீ ஒரு விபச்சாரியின் மகன் என்று திமுக எம்பி ஆ.ராசா கூறினார். அதேபோல, கோவில் கோபுரங்களில் உள்ள சிலைகளை பார்க்கும் போது, செக்ஸ் பொம்மைகள் நினைவுக்கு வருவதாக திருமாவளவன் கூறுகிறார். அதேபோல, காவல்துறை அனுமதி கொடுத்தால் காஞ்சி மடத்தையே இடிப்போம் என்று கூறுகிறார்கள்.

இந்த சூழலில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார். இது இந்து மக்களின் மனதை புன்படுத்தும். சனாதனமும், இந்துவும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றுதான். அமைச்சர்களாக பதவியேற்கும் போது விருப்பு வெறுப்புகளை காட்டமாட்டோம் என உறுதி மொழி எடுத்தனர்.

ஆனால் அதற்கு எதிராக மீறி செயல்படுவதால் ஆளுநரிடம் இருவரையும் அமைச்சர் பதிவியிகிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென புகார் மனு அளித்துள்ளோம். ஆளுனரும் வாங்கி வைத்துக் கொண்டார். மேலும் உதயநிதி தலைக்கு 1 கோடி வட இந்திய சாமியார் அறிவித்தார் உண்மைதான். தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதால் வட இந்திய சாமியாரும் வன்முறையை தூண்டும் அளவிற்கு பேசினார், என தெரிவித்துள்ளார்.

  • Samantha Health Struggles மீண்டும் சமந்தாவை துரத்தும் கொடிய நோய்…இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் ஷாக்..!
  • Views: - 380

    0

    0