சாலை முழுவதும் பள்ளங்கள்…குடிநீரின்றி தவித்த மக்கள்: மண்வெட்டியுடன் களமிறங்கிய பாஜக கவுன்சிலர்…!!(வைரல் போட்டோஸ்)

Author: Rajesh
17 April 2022, 12:46 pm

குமரி: குழித்துறை நகராட்சியில் 16வது வார்டு மக்கள் குடிநீருக்கு சிரமபட்டதால் கவுன்சிலர் மண்வெட்டியுடன் தானே முன்வந்து களத்தில் இறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க குழி தோண்டும் பணிகள் பல இடங்களில் நடந்து வருகிறது. மார்த்தாண்டம் 16வது வார்டு பகுதியில் குழிதோண்டும் போது வீடுகள் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டது.

தொடர் விடுமுறை என்பதால் பழுதை சீரமைக்காததால் குடிநீர் இன்றி பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர். விடுமுறை என்பதால் அதிக அளவில் தண்ணீர் தேவைப்பட்டோருக்கு தண்ணீரே கிடைக்காததால் அவதி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து வார்டு பாஜக கவுன்சிலரான ரத்தினமணி ஒப்பந்தகாரர் மற்றும், குடிநீர் வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தானே பிளம்மர் உதவியுடன் மண் வெட்டியுடன் களத்தில் இறங்கி பழுதடைந்த உடைப்பை சரி செய்த பின்னர் ஒப்பந்த காரர்கள் ஏற்படுத்திய சேதத்தை சரி செய்து குழிகளை மூடியுள்ளார்.

இதை அந்த பகுதி மக்கள் பாராட்டியதோடு அதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1554

    0

    0