பங்கம் செய்யும் பாஜக…பாராட்டும் ஆளுநர்…தமிழக அரசியலில் என்ன நடக்குது?

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2024, 8:03 pm

கவர்னர் எது சொன்னாலும் எதிர்த்து அரசியல் பேசும் திமுக அரசை, கவர்னர் ஆர்.என். ரவி பாராட்டி இருப்பது அரசியல் சூழ்நிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ஓய்ந்துவிட்ட நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக கனமழை கொட்டித் வருகிறது.

இதற்கிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டிருந்தார். அதோடு சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டிருந்தார். மேலும், அதி கனமழை காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மழை வெளுத்து வாங்கி வருவதால் பொது மக்கள் வீடுகளில் முடங்கிய நிலையில், அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு விளம்பரத்தில் ராஜ்ஜியமாகவும், மக்கள் சேவையில் பூஜ்ஜியமாக உள்ளதாகவும். பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

மழைக்கு முன்பே பணிகளை செய்யாமல் மழை வந்த பின்னால் பணிகளை செய்வதால் மக்களுக்கு என்ன லாபம். இந்த அவலம் சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது,என முன்னாள்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டம் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் ஒருநாள் மழைக்கே இப்படியா எனவும் திமுக அரசை விமர்சித்துள்ளார். சாலைகளில் தேங்கிய மழைநீரை உடனுக்குடன் அகற்றும் பணியில் சென்னை முழுவதும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். சமுதாய நலக் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சென்னை முழுவதும் தண்ணீர் தேங்கும் இடங்களை பார்வையிட்டு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். இதனால் மழை தொடர்பான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

அதே சமயம் ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளிப்பதாகவும், தமிழக அரசு மீட்புப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்றும் பாஜக, பாமக,அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், மழையால் சென்னை மக்கள் அவதிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. மழைநீர் வடிகால் வசதி சரியில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், மழை வெள்ள மீட்புப் பணிகள் தொடர்பாக கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு, தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது, என்றார்.

மேலும் அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ற வகையில் தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளத, என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் தமிழக அரசை விமர்சித்து வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்திருப்பது அரசியலில் முக்கியமானதாக மாறியுள்ளது.
மாறும் அரசியல் சூழ்நிலையால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநர் எது சொன்னாலும் எதிர்த்து அரசியல் செய்யும் திமுக தற்போது அடங்கி போவது அரசியல் விமர்சகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வள்ளலார் பிறந்த நாளுக்கு தனி நிகழ்ச்சி நடத்தி, அதில் வள்ளலார் புகழ் பாடிய கவர்னர், ‘சனாதனத்தை ஜாதியுடன் ஒப்பிட்டுப் பேசி தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடாது’ என்றார். இதை திமுக அரசியலாக்கியது. இந்த சம்பவம்
அப்போது பரபரப்பாக்கியது.

தமிழகம் முழுதும் 75வது சுதந்திர நாளை கொண்டாடும் வகையில், சுதந்திரத்தின் வலிமையை இளைஞர்களும் உணர வேண்டும் என்பதற்காக, பள்ளி, கல்லுாரி மாணவர், மாணவியருக்கான கட்டுரை போட்டிகள், கவர்னர் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டன.

இதற்காக, கல்லுாரிகளுக்கு கவர்னர் அலுவலகத்தில் இருந்து தகவல் அனுப்பப்பட்டு, கட்டுரைகள் வரவேற்கப்பட்டன. ஆயிரத்துக்கும் அதிகமானோர் கட்டுரைகள் அனுப்பி உள்ளனர். சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இதற்கும் திமுக ஆர்ப்பரித்தது. பின்பு ஆளுநர் விருந்தில் முதல்வர் பங்கேற்ற பின்பு, அரசியல் சூழலை திமுகவும், கவர்னருக்கும் இடையே மாறி இருக்கிறது. இதற்குப் பின்பு கவர்னர் நடவடிக்கைகளில் திமுக கண்காணிப்பாதை நிறுத்தி விட்டது.

அடுத்த கட்டமாக, கம்பராமாயணத்தை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் திட்டத்தை செயல்படுத்த முன்வந்திருக்கிறார் கவர்னர் ரவி. இதற்காக, மாநிலம் முழுதும் 10 மையங்களில், மாணவர், மாணவியர் கலந்து கொள்ளும் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

கவர்னர் அலுவலகத்துக்கு வரும் புகார் கடிதங்கள் அனைத்தையும் பரிசீலித்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளை பணித்திருக்கிறார் ரவி. அவர்களும், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் என நேரடியாக பேசுகின்றனர். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுகின்றனர்.

எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் கேட்டறிகின்றனர். தி.மு.க., தலைமைக்கு இந்தத் தகவல் தெரிந்தும், சமீப காலமாக கவர்னர் செயல்பாடுகளில் தலையிடுவதில்லை. கவர்னர் அலுவலக கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, அதிகாரிகளுக்கு வாய்வழி உத்தரவு பறந்திருக்கிறது.

இப்படி கவர்னர் தனி ரூட்டில் பயணிப்பதை, தி.மு.க., அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பாஜகவின் முதல் குரலாக விளங்கும் கவர்னரே தமிழக அரசு பாராட்டி இருப்பது அரசியல் சூழ்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசின் விமர்சர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: சமீபத்தில் தான் சட்டம் ஒழுங்கு சரியில்லை. காந்தி மண்டபத்திலே மது பாட்டில்கள் கிடக்கின்றன என எரிமலையாய் கொதித்த கவர்னர். மழை நேரத்தில் பனிமலையாய் மாறியது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் பாஜக தலைவர்கள் அனைவரும் முன்பே பணிகளை செய்யாமல் அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டிவிட்டு, தற்போது ஓடி ஓடி பணிகள் செய்வது நடிப்பு சக்கரவர்த்தியாகவே முதல்வர் காட்சியளிக்கிறார் என விமர்சிக்கும் நேரத்தில் கவர்னர் சம்ஹாரம் வீசி இருப்பது வியப்பின் எல்லைக்கே செல்ல வேண்டியுள்ளது.

கவர்னர் தொடர்ந்து அரசியல் செய்கிறார். கடந்தாண்டு மழை பெய்த போது, காற்று அடித்தாலும் திமுக தான் காரணம், மழை அடித்தாலும் திமுக தான் காரணம் என கவர்னர் கூறுவது கண்டிக்கத்தக்கது என கூறி வந்த திமுக தற்போது மாறி உள்ளது. கவர்னர் மூலமாகவே மெட்ரோ ரயில் நிதியும், கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு சம்பள நிதியையும் திமுக பெற முயற்சிப்பது அப்பட்டமாக தெரியவந்துள்ளது. இதனால் கவர்ன்மீது சேறை வாரி இறைப்பதை திமுக நிறுத்தியுள்ளது.

எது எப்படியோ புதிய உயர் கல்வித் துறை அமைச்சர் பதவி ஏற்ற நேரம் கவர்னருக்கு முதல்வருக்கும் இருந்த பகையும் புகையாய் போனது. கைப்புண்ணுக்கு கண்ணாடி பார்த்து கவர்னர் பேசுவது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கவர்னர் அரசின் செயல்பாட்டை புகழ்ந்து இருப்பது அரசியல் கூட்டணிக்கு அர்த்தமுள்ள கருத்து சுவையா அல்லது நகைச்சுவையா. இது திமுக அரசுக்கு தான் வெளிச்சம். அவர் கருத்து ஏற்புடையதா என்பது போகப் போகத்தான் தெரியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 456

    0

    0