பாஜகவினரை சீண்டிப் பார்க்காதீங்க… பின்விளைவு மோசமாக இருக்கும் ; திமுகவுக்கு நாராயணன் திருப்பதி எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
17 June 2023, 4:48 pm

பாஜக மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யாவை கைது செய்தது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா கைது தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது;- ஒவ்வொரு மாவட்டமாக ஒவ்வொரு காவல் நிலையமாக தேடி தேடி பாஜகவினர் மீது வழக்கு போடப்பட்டு வருகிறது. மு க ஸ்டாலின் திமுக அரசு காவல்துறையை உபயோகித்து பாஜகவினரை வேண்டுமென்றே திட்டமிட்டு மிரட்டி பார்க்கிறது. இந்த மிரட்டலுக்கு அஞ்சுவது பாஜக அஞ்சுவது கிடையாது.

செந்தில் பாலாஜி பல லட்சம் கொள்ளை அடித்தவர். ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சாக ஸ்டாலின் பேசி வருகிறார்.

ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக பாஜக கேள்வி கேட்கும், அதற்கு பதில் கூற வேண்டும். அதை விட்டு கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சியினுடைய தவறான புகார்களுக்கு எல்லாம் பணிந்து வேண்டுமென்று திட்டமிட்டு, பாஜக தொண்டர்களையோ, நிர்வாகிகளையோ அடக்க நினைப்பது, கைது செய்வது என்பது போன்ற நடவடிக்கைகளை ஈடுபட்டால், பாஜக யார் என்று திமுகவினருக்கு உணர்த்த நேரிடும்.

திமுக யார் என்று ஸ்டாலின் கேட்கிறார். நரேந்திர தாமோதர தாஸ் மோடி என்று சொன்னாலே உலகமே அதிரக்கூடிய ஆர்ப்பரிக்க கூடிய அகமகிழக் கூடிய ஒரு நிலை இந்த நாட்டிலே இருக்கிறது. எங்களுக்கு சவால் விடுவது என்பது தேவையற்ற விஷயம். ஆட்சியை முறையாக நடத்த வேண்டும் இதுபோன்று தேவையற்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது.

மேலும், கைது செய்திருக்கக்கூடிய அனைத்து பாஜகவினரையும் விடுதலை செய்ய வேண்டும். அடிமட்ட தொண்டர்களுக்கு ஆதரவாக, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்காக, குரல் கொடுத்த எஸ் ஜி சூர்யா அவர்களையும், தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட பாஜகவினரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

பாஜகவினர் மீது தேவையற்ற வழக்குகளை பதிந்து இருக்கின்றனர். கைது செய்துள்ள அத்தனையும் பழிவாங்கும் நடவடிக்கை. திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை 100 பாஜகவினரை கைது செய்து உள்ளனர். திமுகவினரை சீண்டி பார்க்காதீர்கள் என மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார். இப்போது நான் கூறுகிறேன், பிஜேபியினரை சீண்டி பார்க்காதீர்கள், எங்களை சீண்டி பார்த்தால், அதனுடைய விளைவை திமுக உறுதியாக அனுபவிக்கும்.

ஒரு முதலமைச்சர் எப்படி பொறுப்புடன் பேச வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். உறுதியாக தமிழகம் முழுக்க இன்னும் கூட ஏதாவது செய்ய முயற்சிப்பார்கள். அதை எல்லாம் திறனோடு எதிர்கொள்வதற்கு பாஜக தயாராக உள்ளது, என தெரிவித்தார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 371

    0

    0