பா.ஜ.க. எனும் பேரழிவு அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது : CM ஸ்டாலின் அட்டாக்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2024, 1:17 pm

பா.ஜ.க. எனும் பேரழிவு அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது : CM ஸ்டாலின் அட்டாக்..!!!

பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியானது. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் விமாசித்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது! புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றி வைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை. பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது.

நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது. சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

  • Two years Bond with Raashi khanna Says Popular Actor 2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!