அதிமுகவில் இணைந்தார் நடிகர் கவுதமி… பாஜக முன்னாள் நிர்வாகிகளை தட்டி தூக்கும் அதிமுக… சைலண்டாக காய் நகர்த்தும் இபிஎஸ்!!!

Author: Babu Lakshmanan
14 February 2024, 6:44 pm

அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தொகுதி பங்கீட்டில் ஒருவேளை உடன்பாடு ஏற்படாவிட்டால், கூட்டணி மாற்றம் ஏற்படும் நிலையும் உள்ளது.

அதேவேளையில், கடந்த 5 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக வெளியேறிய நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, பாமக, தேமுதிகவிடம் தனித்தனியே ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. இதனால், வலுவான கூட்டணியை அமைக்கப்போவது யார்..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நிர்வாகிகள் கட்சி தாவும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், அண்மையில் அதிமுகவைச் சேர்ந்த 17 முன்னாள் எம்எல்ஏக்களும், முன்னாள் திமுக எம்பியும் டெல்லியில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அண்ணாமலையின் இந்த செயல் அதிமுக மற்றும் திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில், பாஜகவினருக்கு ரிவேஞ்ச் கொடுக்கும் விதமாக, அக்கட்சியின் முன்னாள் நிர்வாகியும், நடிகையுமான கவுதமி அதிமுகவில் இணைந்தார். சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஏற்கனவே, பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது நடிகை கவுதமியும் அதிமுகவில் இணைந்திருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Bigg Boss This Week Eviction பிக் பாஸில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்.. கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர்கள்!
  • Views: - 348

    0

    0