மதுரை ஜீன்:22, மத்திய ௮ரசு நலத்திட்டங்களால் கோடிக்கணக்கான மக்கள் நாட்டில் பயனடைந்துள்ளனர் என தேசிய பாஜக இணை ஓருங்கிணைப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில் மக்கள் தொடர்பு பேரியக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் ராஹ்குமார், மாநில கூட்டூறவு பிரிவு செயலாளர் பாஸ்கரன் , மண்டல் தலைவர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பாஜக தேசிய இணை ஓருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு பார்வையாளருமாகிய சுதாகர் ரெட்டி சிறப்பு ௮ழைப்பாளராக பங்கேற்று மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனை திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- பாரத பிரதமர் மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டுகால பாஜக ஆட்சியில் எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்றும், பாரத பிரதமர் மோடி வழங்கிய பல்வேறு நலத்திட்டங்களால் கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைந்துள்ளனர் என்றும் கூறினார். குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை லட்சக்கணக்கான மக்கள் அனைவருக்கும் வீடு, ஜன் கல்யான், ஜல்ஜீவன், முத்ரா வங்கி கடன் உதவி உள்பட பல்வேறு மத்திய ௮ஒரசு திட்டங்களினால் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் பாஜகவை வீழ்த்த முடியாது என்ற அவர், தமிழகத்தில் நடைபெற்று வருகின்ற திமுக அரசில் ஊழல் மலிந்து கட்டப்பஞ்சாயத்து பெருகிவிட்டது என்றும், இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் அமையும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பொது செயலாளர் பாலகிருஷிணன், , ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…
OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…
திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…
சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.…
ஜீ தமிழில் அடியெடுத்து வைக்கும் மணிமேகலை சின்னத்திரையில் தன்னுடைய ஆங்கரிங் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மணிமேகலை,இவர் கடந்த…
This website uses cookies.