பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவா சிறையில் அடைப்பு : எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2022, 10:01 pm

திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில பொதுச் செயலருமான சூர்யா சிவா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.

ஆனால் அவர்கள் கலைய மறுத்ததால் 5 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது காவல்துறையினருக்கும் பிஜேபி கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது சிலர் திடீரென காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.

சூர்யா சிவா மீது கூட்டமாக பொருட்களை எடுத்துச் செல்லுதல் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கண்டோன்மென்ட் காவல் நிலையத்திலிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொரோனோ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர்.

பின்னர் மருத்துவமனையில் இருந்து திருச்சி JM2 நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி முன்பு ஆஜர்படுத்தி பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…