ஒட்டுமொத்த பதவியும் அண்ணாமலைக்கே : தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த பாஜக பிரமுகரின் வாழ்த்து.. வைரலாகும் ட்விட்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2022, 9:12 pm

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக பிரமுகர் பிறந்த நாள் வாழ்த்து கூறியது ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை விருப்ப ஓய்வு பெற்ற பின் தமிழக பாஜகவில் எல். முருகனுக்கு பிறகு தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் நியமனம் செய்தது முதல், கட்சியில் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பு கிளம்பியது. உடனே முக்கிய பதவி கொடுப்பதா என சீனியர் தலைவர்கள் கவலையுற்றனர்.

ஆனால் அண்ணாமலை தலைவரான பின் சட்டமன்ற தேர்தலில் 4 பாஜக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர். அண்ணாமலையின் பேச்சு ஆளுங்கட்சியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது

ஒவ்வொரு நாளும் உண்மையை உரக்க கூறி கடும் விமர்சனத்தை ஆளுங்கட்சி மீது வைத்து வருகிறார். தமிழக மக்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ள அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து குவிந்து வருகிறது.

அதில் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கூறியுள்ள வாழ்த்து பாஜகவையும், தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவின் வருங்கால பிரதமர் அல்லது பாதுகாப்பு அமைச்சர் அல்லது எம்.பி., அல்லது முதல்வர் அல்லது எம்.எல்.ஏ. அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. நம்பிக்கையின்மையில் இருந்து நம்பிக்கை வரை, பார்ப்பனிய மனநிலையில் இருந்து தேசம்தான் முதல் வரை, ஒருதலை பட்சம் முதல் முழுமையான வளர்ச்சி வரை, இருளில் இருந்து ஒளி வரை, விஸ்வகுரூ” என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

பிரதமர், முதல்வர் என இவர் வாழ்த்தியுள்ளது கவனத்தை ஈர்த்து வருகிறது. இவரது இந்த ட்விட்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ