நீங்க ஏறி அடிச்சால், நாங்களும் ஏறி அடிப்போம்… அமைச்சர் சேகர்பாபுவுக்கு எச்.ராஜா பதிலடி!!

Author: Babu Lakshmanan
11 June 2022, 3:26 pm

மதுரை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்த நிலையில், அவருக்கு பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தேசியம், தெய்வீகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். கடந்த ஓராண்டாக தமிழகத்தில் இந்த இரண்டுக்குமே பெரிய ஆபத்து வந்துள்ளது. சுதேசி அரசுகளை தேசிய அளவில் ஒன்றிணைத்த பின்னர், மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

மாநிலங்களை ஒன்றாக்கவில்லை. ஆனால் மாநிலங்கள் தான் சேர்ந்து தேசியமே உருவானது மாதிரி மக்கள் மனதில் தவறான கருத்தை பதிவு செய்கின்ற ஒரு மோசமான அரசு நடந்து கொண்டிருக்கிறது. தருமபுரம் ஆதினம் பட்டின பிரவேச நிகழ்ச்சியில் இருந்து இந்த அரசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஹிந்து மத தலைவர்கள், ஆதினங்களுக்கு எதிராக சிலர் ரவுடிகளைப் போல் நடந்து கொள்கின்றனர்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ‘துாக்கி அடிப்பேன் சும்மா இருக்கேன்னு நினைக்கிறியா, பதுங்குகிறது பாய்வதற்கு தான்’ என பேசியுள்ளார். அமைச்சர் பேசும் பேச்சா. அவர் எப்படி இருந்தார் என்ற லட்சணம் தெரியும். ஜெயலலிதா காலில் விழுந்து படுத்து கிடந்தார். மதுரை ஆதினத்திற்கு எதிராக வன்முறையுடன் பேசியுள்ளார். சேகர்பாபு அமைச்சருக்கான மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.

வார்த்தைகள் தடித்து பேசினால் பா.ஜ.க களத்தில் குதிக்கும். நீங்க ஏறி அடிக்க தயார் என்றால் நாங்களும் ஏறி அடிக்க தயார். இவர்கள் ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 100 கோயில்களுக்கு மேல் இடித்துள்ளனர். கேட்டால் நீர்நிலைகளில் உள்ளதாக கூறுகின்றனர். வள்ளுவர் கோட்டம் எதில் உள்ளது, வடக்கு மாம்பலத்தில் லேக்வியூ ரோடு உள்ளது. அதில் லேக் இருக்கா. இந்த திராவிட இயக்கம் என்பதே தமிழை, தமிழ் பண்பாட்டை, தமிழ் கலாச்சாரத்திற்கு ஆதரவாக உள்ள கோயில்களை அழிப்பதற்காக உள்ளது, என்றார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!