உதயநிதி நிச்சயம் தண்டிக்கப்படுவார்… டி.ஆர்.பாலுவிற்கு கருப்பு பணத்தை மாற்றுவதில்தான் சிக்கல் : எச். ராஜா விமர்சனம்..!!
Author: Babu Lakshmanan6 September 2023, 10:00 pm
உதயநிதி மீது தமிழகம் முழுவதுமுள்ள காவல் நிலயங்களில் பா.ஜ.க சார்பில் புகரளிக்கவுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திமுக அரசைக் கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் பாஜக சார்பாக நடந்த போராட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: உதயநிதி மீது தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் பாஜக சார்பில் புகார் அளிக்க உள்ளோம்.
பாரதம் என பெயர் மாற்றுவதில் எந்த சிக்கலுமில்லை. டி.ஆர்.பாலுவிற்கு கருப்பு பணத்தை மாற்றுவதில்தான் சிக்கல் உள்ளது. சனாதனம் குறித்த பேச்சிற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சனாதானம் குறித்து பேசியவர் உச்சநீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார். உ.பி சாமியாருக்கு உதயநிதியின் படம் எப்படி கிடைத்தது. இந்த குற்றச்சாட்டை உருவாக்குவதற்காகவே பொய்யாக சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்கள், என தெரிவித்தார்.