பாஜக ஒரு மூழ்கும் டைட்டானிக் கப்பல்… பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்தால் புகைச்சல்!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2024, 5:56 pm

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இது குறித்து பாஜக தலைவர்கள் யாரும் வாயை திறப்பதில்லை. தற்போது தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 13 இடங்களில் காங்கிரஸ் தலையாமையிலான இந்தியா கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்தைப் பிடித்த நிலையில் பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது.

சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலிலும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

அதைத்தொடர்ந்து நடந்த இடைத் தேர்தலிலும் பாஜக சறுக்களை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் இடைத்தேர்தல் சறுக்கல் குறித்து சுப்ரமணிய சுவாமி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல் மூழ்குவதை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு மோடியின் தலைமையே சிறந்ததாகும்.

இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக நிரந்தரமாக மூழ்குவதற்கான விரிசல்கள் விழுந்து வருவதையே குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார். சுப்ரமணிய சுவாமியின் இந்த கருத்து பாஜக மேலிடத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 256

    0

    0