பாஜக பயங்கரவாத கட்சிதான்.. தொண்டர்கள் தீவிரவாதிதான் : ஒப்புக்கொண்ட தமிழிசை!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2024, 10:59 am

பாஜக பயங்கரவாத கட்சிதான், தொண்டர்கள் தீவிரவாதிதான் என தமிழிசை சவுந்திரராஜன் பேசியுள்ளது பேசு பொருளாகியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜக பயங்கரவாதி கட்சி என காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் ஆர் கே கூறியுள்ளார் கேட்ட கேள்விக்கு, ஆம் நாங்கள் பயங்கரமாக மக்களுக்கு சேவை செய்கிற கட்சி, பயங்கரமாக தொண்டர்கள் படை வைத்திருக்கிற கட்சி, பயங்கரமாக எதிரணியில் உள்ள கூட்டணி கட்சிகளை அச்சுறுத்துகிற கட்சி, காங்கிரஸ் கட்சியை நாங்கள் பயங்கரமாக மிரட்டி கொண்டிருப்பதால் அவர் எங்களை பயங்கரமாக கட்சி என குறிப்பிட்டுள்ளனர்.

தீவிரவாதம் பாஜக ஆட்சியில் தான் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆம் நாங்கள் தீவிரவாதிகள் என்றால் மக்கள் சேவையில் தீவிரவாதிகள், மக்கள் பணியில் அதிதீவிரவாதிகள்.

ஹரியானா மாநிலம் போன்ற தேர்தல் தோல்விகளால் காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கேவுக்கு என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை.

தேர்தலில் பாஜகவும் காங்கிரசும் ஒரே மாதிரியாக வாக்கு சதவீதம் வைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். அப்படி பார்த்தால் காஷ்மீரில் காங்கிரஸ் 23 சதவீதம் வாக்கு தான் வைத்துள்ளது. பாஜக 25 சதவீதம் வாக்குகள் வைத்துள்ளது.

காஷ்மீரில் முழுவதுமாக தீவிரவாதத்தை கட்டுப்படுத்திய கட்சி பாஜக, நாங்கள் மக்கள் பணியிலும் மக்கள் சேவையில் தீவிரமாக செயல்படும் தீவிரவாதிகள் என்றார்.

கேரளா சபரிமலை விவகாரத்தில் பக்தர்களுக்கு எது தேவையோ, அதை அந்த மாநில அரசு செய்து தர வேண்டும் என்றார்.

பருவமழை காலம் தொடங்கிவிட்டது, மதுரை, திருச்சி, சென்னை போன்ற பகுதிகளின் முன்னேற்பாடுகள் எதுவும் இல்லை. உதயநிதி வார்ரூமில் இருந்து வேலை செய்வதற்கு பதிலாக களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும், மின் கம்பிகள் அறுந்து பல இடங்களில் உயிர்கள் பலியாகிறது, திமுக விடியல் அரசாக இல்லை விளம்பர அரசாகத்தான் இருக்கிறது.

ரயில் விபத்துகளை தடுப்பதற்கு புதிய டெக்னாலஜி முறைகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி வருகிறார். அதுபோன்ற டெக்னாலஜி பயன்படுத்தியதால் தான் சென்னை ரயில் விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை, குறிப்பாக ரயில் விபத்து குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கும் திமுக கட்சிக்கும் உரிமையே இல்லை, தமிழகத்தில் நடந்த வான்சாக நிகழ்ச்சியில் மக்கள் உயிரிழந்தனர் இதை தடுக்கவே திமுக கட்சியால் முடியவில்லை.

முன்பெல்லாம் ரயில்கள் இறக்குமதி செய்யப்பட்டது, இப்போது வந்தே பாரத் ரயில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

2026 தேர்தல் பணியை பாஜக தொடங்கிவிட்டது, திமுக கூட்டணி கட்சிகள் இப்போது கூட்டணியில் இல்லை, விசிக பொதுச்செயலாளர் ஒரு மாதிரியாக பேசுகிறார், தலைவர் ஒரு மாதிரியாக பேசுகிறார், கம்யூனிஸ்ட் சாம்சங் போராட்டத்தில் மாற்று கருத்து தெரிவித்துள்ளது. அதேபோல் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்கிறது. இப்படி திமுக கூட்டணி கட்சிகளில் பல குழப்பங்கள் உள்ளன.

எனவே 2026 இல் பாஜக கூட்டணி ஆட்சி தான் ஆட்சியில் அமையும் என்பது உறுதி. விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சி மாநாட்டிற்கு தமிழக அரசு தொடர்ந்து தடை விதித்து கொண்டே இருக்கிறது. இதைக் கண்டு தமிழக அரசுக்கு புதிய கட்சிகளை கண்டால் அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாக புரிகிறது எனக் கூறினார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 338

    0

    0