மத்திய அரசால் வள்ளி கும்மி கலைக்கு உரிய அங்கீகாரம்… கோவையில் கும்மி ஆடி வாக்குசேகரித்த அண்ணாமலை வாக்குறுதி..!!

Author: Babu Lakshmanan
3 April 2024, 8:47 am

மீண்டும் பிரதமராக மோடி அமரும போது வள்ளிக்கு கும்மி கலைக்கு என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும் என்றும், அப்படி கொடுக்கும் பொழுது அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மி ஆட முடியும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது, அவர் பேசியதாவது :- முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு பிரதமரை பலப்படுத்த போகின்றோம். பிரதமர் வலிமையாக வந்து அமரும்போது கோவையும் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்லும்.

மேலும் படிக்க: கனவுல கூட இனி வீடு கட்ட முடியாது.. மக்களே சிந்தியுங்கள் : தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் : இபிஎஸ் பிரச்சாரம்!

பாராளுமன்ற உறுப்பினர் மோடி இருக்கும் கட்சியை சார்ந்த உறுப்பினர் கோவையில் இருக்க வேண்டும். எனவே உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் தாமரைக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும். வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. சீவக சிந்தாமணியில் பேசப்பட்ட கலை வள்ளி கும்மி. அயோத்தியில் ராமர் கோவில் திறக்கும் போதும் வள்ளி கும்மி நடனம் ஆடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

மேலும் படிக்க: டெல்டா பீதியில் திமுக?…. கூட்டணி கட்சிகளுக்கு தாராளம்!

இன்று நாங்கள் ஒரு உறுதி கொடுக்கின்றோம். 2024″ல் பிரதமர் ஆட்சியில் அமர்ந்த பின்னர் வள்ளிக்கு கும்மி என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும். பாரம்பரியான கலை என்று அங்கீகாரம் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கும் பொழுது அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மி ஆட முடியும், கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

குறிப்பாக, கோவையில் குப்பைகள் எடுக்கப்படுவதில்லை எனவும், மேயர் உள்ளிட்ட பதவிகள் டம்மியாக இருக்கின்றனர் என விமர்சித்தார்.

  • Kanguva movie OTT date announcement 100 கோடி கொடுத்த ஓடிடி..! தியேட்டருக்கு டாடா காட்டிய “கங்குவா”
  • Views: - 232

    0

    0