திமுக என்னை உளவு பார்க்கிறது… ஒரு பைசா லஞ்சம் வாங்கியிருக்கிறேன் என நிருபிக்க முடியுமா..? அண்ணாமலை சவால்..!!

Author: Babu Lakshmanan
23 March 2023, 12:47 pm

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால் நடிகர் வடிவேல் நடித்த 23ம் புலிகேசி படம் தான் நினைவுக்கு வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி 20 ஆண்டுகளாக சொல்லி வருகிறார். சில உட்கட்சி விசயங்களை பேசுவது பதவிக்கு அழகல்ல. மக்கள் பிரச்சினை குறித்து டெல்லியில் என்ன பேசினாலும் வெளியே பேசுவது என் கடமை. காலமும் நேரமும் வரும் போது பேசுவேன். உள்கட்சியில் நடக்கும் விசயங்களை பேசுவது சரியாக இருக்காது. உங்களிடம் சொல்ல வேண்டிய தகவலை கண்டிப்பாக பேசுவேன்.

கர்நாடக தேர்தல் பணியில் இருப்பதால் 2 நாளில் பட்ஜெட் குறித்து விரிவாக பேசுவேன். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால் நடிகர் வடிவேல் நடித்த 23ம் புலிகேசி படம் தான் நினைவுக்கு வருகிறது. முதலமைச்சர் தினமும் சமூக வலைதளத்தில் யார் தவறாக பேசுகின்றனர் என கேட்டு அதிகாலையில் கைது செய்வதில் தான் அரசு முனைப்பு காட்டுகிறது. பெண்கள், குழந்தைகள் மீது வன்மத்தை காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக முதலமைச்சருக்கு சமூக வளைதளத்தில் வரும் கருத்துகள் முள் போல் குத்துகிறது.

இத்தனை ஆண்டுகள் பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் வந்தவர் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பது எந்தளவு பெருத்தன்மையை காட்டுகிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக தான் இருக்கிறது. 2021 ஆண்டை விட 2022ம் ஆண்டு முதல் அதிகரித்து விட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் செலவு செய்தது குறித்து அரசு உளவுத்துறை, 70 ஆயிரம் போலீசார் கர்நாடகவிற்கு அனுப்பட்டும்.

ஆட்சியே அவர்களிடம் இருக்கும் போது நான் என்ன பதில் சொல்ல வேண்டி உள்ளது. வருவாய் துறை அதிகாரிகள், ஆட்சியர், உளவுத் துறை உள்பட முழு அரசு அதிகாரிகளை அண்ணாமலை மீது ஏவி விட்டு சொத்து எவ்வளவு, எவ்வளவு சம்பாதித்தான், கர்நாடகவில் 9 ஆண்டுகள் பணியில் இருந்த போது ஒரு பைசா லஞ்சம் வாங்கினானா என்பதை தேடி பிடித்து வந்து சொல்ல சொன்னால் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.

ஆட்சி, அரசு, அதிகாரம் உங்கள் கையில் இருக்கும் போது ஒருவரை கூட்டி வருங்கள். ஒரு மனிதனை எதிர்க்க இத்தனை பேரா. தமிழக வரலாற்றில் முதன் முறையாக பார்க்கிறேன். இந்த மனிதன் ஏதோ சிஸ்டத்தை கலைக்கிறான் என்று அர்த்தம். நல்லதை நோக்கி போகிறேன் என்பதால் தினமும் தாக்குதல் செய்கின்றனர். 2 போலீஸ் அதிகாரிகளை குழு அமைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் அண்ணாமலை, குடும்பத்தினர் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்டு உள்ளதா..? வருமான எங்கிருந்து வருகிறது. செல்போனை ஒட்டு கேட்கிறீர்கள் எல்லாம் உள்ளது. சாராய அமைச்சர் குற்றச்சாட்டு வைத்தால் அரசும் அதிகாரமும் உங்கள் பக்கம் இருப்பதை மறந்து விட வேண்டாம்.

கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்வதை நல்லதாக பார்க்கிறேன். பா.ஜ.க. வளர்ச்சியை ரசிக்க விரும்புவில்லை என்பதை பார்க்கிறேன். கூட்டணி கட்சியாக யாராக இருந்தாலும் பா.ஜ.க.வை வளர்க்க வேண்டும் என நினைத்தால் முட்டாள்கள். அவர்கள் பெரும் தலைவர்கள். அரசியலை பொறுத்தவரை யாரும் நண்பர்கள் அல்ல. இதை எப்போ புரிந்து கொள்கிறோமோ, அப்போது தான் பா.ஜ.க. வளர்ச்சி. அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது. நிரந்தரமான எதிரிகள் கிடையாது. அவரவர் கட்சிகளை வளர்க்க தான் இருக்கிறோம். அவர்கள் கட்சியை வளர்ச்சியை நாங்கள் நிறுத்துகிறோம் என்ற கவலை இருக்கிறது. அது தவறு கிடையாது.

தனித்து போட்டியிடுவது என்பது எங்களுக்கும், தமிழக மக்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை. உங்கள் கடையை திறக்க நான் ஆள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி