‘மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது.. முடிஞ்சதை பண்ணுங்க’ ; திமுகவுக்கு சவால் விட்ட அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
25 April 2023, 10:16 am

ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு திமுக எம்பி டி.ஆர். பாலு அனுப்பிய நோட்டீசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டு தினமான கடந்த 14ம் தேதி திமுக சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,கேஎன் நேரு,எ.வ.வேலு, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.

தங்கள் மீது அவதூறு பரப்பியதாக கூறி திமுக தலைமைக் கழகம், உதயநிதி ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் தனித்தனியே இழப்பீடு கோரி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு பதிலளித்து பேசயி அண்ணாமலை, மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, இழப்பீடு தர முடியாது, சட்ட ரீதியாக இந்த வழக்கை சந்திக்க தயார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், டி.ஆர்.பாலு அனுப்பிய நோட்டீசுக்கு வழக்கறிஞர் பால் கனகராஜ் மூலம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், அனைத்து ஆதாரங்களுடன் தான் திமுக முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை அவர் வெளியிடவில்லை. எனவே அவதூறு சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

பல நிறுவனங்களில் அவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்குகள் இருப்பதற்கான ஆவணங்கள் உள்ளன. எனவே மன்னிப்பு கேட்க முடியாது. இழப்பீடும் தர முடியாது. சட்டரீதியாக இந்த வழக்கை எதிர்கொள்ள தயார், என அதில் கூறப்பட்டுள்ளது.

திமுகவினர் அடுத்தடுத்து அவதூறு நோட்டீஸ் அனுப்பி வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி