பாஜக கோட்டை முற்றுகை… வடமாவட்டத்திற்கு எஸ்கேப்பான முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
31 May 2022, 4:13 pm

பாஜக கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதை தெரிந்த முதலமைச்சர் ஸ்டாலின், வடமாவட்டங்களுக்கு எஸ்கேப் ஆகிவிட்டதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்மையில் பெட்ரோல், டீசல் மீதான வரியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கணிசமாக குறைத்தது. மேலும், மாநில அரசுகளையும் குறைக்க வேண்டி பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, பல்வேறு மாநிலங்கள் தங்களின் வசதிக்கு ஏற்ற் போல, வரியை குறைத்தது.

ஆனால், தமிழக அரசு எந்த வித வரியையும் குறைக்கவில்லை. இது பாஜக மற்றும் பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, திமுக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், அண்ணாமலையின் எச்சரிக்கைக்கு திமுக அரசு செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில், அறிவித்தபடி, பாஜகவினர் இன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்திற்காக, சென்னையில் திரண்டனர்.

மேலும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பேனரை பிடித்தபடி பாஜகவினர் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் கலந்து கொண்ட அண்ணாமலை, தமிழக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசினார். தி.மு.க அரசு வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததாகவும், கோட்டையை நோக்கி நாம் வரப் போகிறோம் என்று தெரிந்ததுமே முதலமைச்சர் ஸ்டாலின் டெல்டா மாவட்டத்திற்கு எஸ்கேப் ஆகிவிட்டதாகக் கூறினார்.

மேலும், கடந்த 3 நாட்களாக தி.மு.க அரசு உதயநிதிக்கு ஆதரவாக தீர்மானம் போட்டு வருவதாகவும், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை எனவும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 730

    0

    0