சென்னை : அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில ரூ.1,000 அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அதாவது, தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும். சென்னையில் மழை, வெள்ளத் தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைத்துறை ரூ.7,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. காவல்துறைக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதி பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு. பள்ளிக்கல்வித்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. அரசு பள்ளி மாணவிகள், உயர்கல்வி பயில்வதற்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்விக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
தமிழக அரசின் இந்த பட்ஜெட்டிற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக பட்ஜெட் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில்
6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியினை பயிலும் போது ₹1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்! ஆனால் இது ‘பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.