கோவிலுக்குள் பெட்ரோல் குண்டுவீச்சு ; அரைகுறை நாத்திகம் பேசும் கும்பலை தடுக்காததே காரணம்… கையாலாகாத திமுக தான் பொறுப்பு ; அண்ணாமலை!

Author: Babu Lakshmanan
10 November 2023, 12:53 pm

சென்னையில் கோவிலுக்குள் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவத்திற்கு திமுக தான் பொறுப்பு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை – பாரிமுனையில் வீரபத்ரசுவாமி தேவஸ்தான கோவில் இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணன் மீது வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, இதன் தொடர்ச்சியாக இன்று கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஶ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது.

போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, திமுக தவறியதன் விளைவு, இன்று கோவிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. தீவிரவாதத் தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று மடைமாற்ற முயற்சித்த கையாலாகா திமுக அரசே இதற்கு முழு பொறுப்பு, எனக் குறிப்பிட்டள்ளார்.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?