அவசர அவசரமாக லண்டன் புறப்பட்ட அண்ணாமலை… விமான நிலையம் வந்து வழியனுப்பிய பாஜக நிர்வாகிகள்..!!!

Author: Babu Lakshmanan
22 June 2023, 8:31 am

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 6 நாள் பயணமாக இன்று அதிகாலை லண்டன் புறப்பட்டு சென்றார்.

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆண்டு முதல் முறையாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இந்தப் பயணமானது அரசியல் ரீதியானது அல்ல என்றும், தனது கல்விக்காக வந்திருப்பதாக அண்ணாமலை தெளிவுபடுத்தியிருந்தார். அமெரிக்காவில் 2 வாரம் தங்கியிருந்து தனது கல்விக்கான வேலைகளை செய்து முடித்தார்.

பின்னர், இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் 3 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றிருந்தார். அங்கு உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசின் நிதியுடன் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், லண்டனில் நடக்கும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்காக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார். அவரை பாஜக நிர்வாகிகள் விமான நிலையத்திற்கு வந்து வழியனுப்பி வைத்தனர். இந்தப் பயணத்தின்போது லண்டனில் உள்ள தமிழ்ச் சங்க பிரதிநிதிகளையும் அண்ணாமலை சந்தித்துப் பேசவுள்ளார்.

இதனிடையே, ஆருத்ரா மோசடி வழக்கில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அண்ணாமலையின் லண்டன் பயணம் கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 472

    0

    0