திமுக ‘வாரிசு’களுக்கு மட்டுமா அரசு வேலை…? திமுக நிர்வாகியால் சலசலப்பு ; ஆதாரத்தை வெளியிட்டு கொதிக்கும் அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
9 January 2023, 1:52 pm

அரசு வேலையை திமுகவினருக்கே வழங்கப்பட்டு வருவதாக திமுக நிர்வாகி பேசும் வீடியோவை பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே திமுகவிற்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டு வருகிறது. திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட தயாராக இருப்பதாக அண்ணாமலை கூறி வருகிறார். அதேவேளையில், அண்ணாமலையை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Annamalai Warning - Updatenews360

இந்த நிலையில், திமுக கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி நிர்வாகி ஒருவர் பேசும் வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிர்ந்ததுடன், அவரது பேச்சுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், திமுக நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு வருவதாக திமுக தென்காசி மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதனை பகிர்ந்த அண்ணாமலை, பொதுமக்களை ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது இந்த திறனற்ற திமுக அரசு. திமுக தென்காசி மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் அரசு வேலை வாய்ப்புகளை தன் சொந்த கட்சிக்காரர்களுக்கே ஒதுக்குவதாக தெரிவிக்கும் இந்த காணொளி அதிர்ச்சி அளிக்கிறது. இதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், எனக் கூறியுள்ளார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 482

    0

    0