ஒரு வருடத்தில் ரூ.30,000 கோடி சம்பாதித்த குடும்பம்.. CM ஸ்டாலின் தான் பொறுப்பு.. டக்கென பதிலை சொல்லுங்க ; அண்ணாமலை அழுத்தம்!!
Author: Babu Lakshmanan21 April 2023, 4:54 pm
ஊழலில் கொழிக்கும் தனது குடும்பத்தினரின் செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்று மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அமைச்சர் உதயநிதி குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ பாஜக வெளியிட்ட DMK Files காணொளிக்கு வலுசேர்க்கும் விதமாக உள்ளது. அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்காமல் திமுக அரசு மவுனமாக இருப்பது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
பாஜக சொல்லியதை போல கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என்பதை என்ஐஏவின் குற்றப்பத்திரிகை உறுதி செய்துள்ளது. இன்று வரை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என்று மக்களை ஏமாற்றி வருகிறது திமுக ; திமுகவினரின் ஆட்சி அதிகார மமதையால் மக்கள் நாள்தோறும் அவதி.
ஒருபுறம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மறுபுறம் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு வருடத்தில் 30 ஆயிரம் கோடி முறைகேடாக சம்பாதித்திருப்பது என மக்கள் விரோத செயல்களை இனி அனுமதிக்க முடியாது. ஊழலில் கொழிக்கும் தனது குடும்பத்தினரின் செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்று மக்களுக்கு பதிலளிப்பதோடு, தகுந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.