ஸ்மார்ட் வகுப்பறைக்கான டெண்டர்…. கேரள அரசு நிறுவனத்துக்கு தமிழக அரசு கொடுத்தது ஏன்..? அமைச்சர் பிடிஆருக்கு அண்ணாமலை கேள்வி

Author: Babu Lakshmanan
17 May 2024, 2:54 pm

பிரதமர் மோடியின் பேச்சை விமர்சித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பதிலடி கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பிரபல ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, சில அரசியல் கட்சிகள் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை வழங்குகின்றன. இதனால் மெட்ரோல் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. அதோட இலவச பேருந்து பயண திட்டத்தால் போக்குவரத்து அதிகரித்து, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்தார். இந்த நிலையில், அமைச்சருக்கு பதிலடி கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- தி.மு.க அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளை விலைகொடுத்து பெற்றாக வேண்டியுள்ளது. உலகில் எந்த மூலையிலும் இதுபோன்று நடந்ததில்லை. பயனாளிகளை ஒவ்வொரு அமைச்சரும் ஓசி என இழிவுபடுத்துவது தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான்.

மேலும் படிக்க: திமுகவின் இலவச பேருந்து திட்டம் குறித்து பிரதமர் மோடி விமர்சனம்.. பதிலடி கொடுத்த அமைச்சர் பிடிஆர்!

அரசின் சேமிப்பில் இருந்து மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவது என்பது சிறந்த நகைச்சுவையாகும். பால், மின்சாரக் கட்டணம் போன்ற இதர அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒருநபரின் வலது பாக்கெட்டில் திருடி, இடது பாக்கெட்டுக்கு நலத்திட்டம் என்ற பெயரில் கொடுப்பதில் திமுகவுக்கு கை வந்த கலை.

2) திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சுமார் 6000 பேருந்துகளின் சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டது. இது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

3) கடந்த 3 ஆண்டுகளாக மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யும் திட்டம் அறிவிப்பாகவே உள்ளது.

திமுக அரசின் மாபெரும் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக நிதி இலாகாவை இழந்த அமைச்சர், தனக்கு சம்பந்தமே இல்லாத துறை குறித்து பேசி வருகிறார். அப்படியெனில், அரசுப் பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டரை, கேரள அரசுக்கு சொந்தமான தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வழங்கியது ஏன்..?

நமது மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் ஒரு பகுதியைக் கொண்ட இந்த ₹1000 கோடி டெண்டரில் ELCOTக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ஏன்..? என்று தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் விளக்கமளிப்பாரா?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!