அடித்துச் சொல்வேன்…. ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாவாதி தான் ; அதிமுகவினருக்கு பட்டியலிட்டு விளக்கிய அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
27 May 2024, 7:17 pm
Quick Share

சென்னை ; கருத்துரிமையை நசுக்கி ஆட்சி செய்யும் மு.க ஸ்டாலின் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள திருமாவளவன் கருத்துரிமை குறித்து கூறுவதற்கு உரிமை இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள மாநில பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.

மேலும் படிக்க: உணவில் கிடந்த பூச்சி… டிரிப்ஸ் போட்டபடியே மருத்துவமனைக்கு வந்த நர்சிங் மாணவிகள் ; களத்தில் இறங்கிய ஆட்சியர்..!!!!

பின்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது :- தேர்தலுக்குப் பிறகு, வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக கல நிலவரங்கள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தியா முழுவதும் 6 கட்டங்களாக 486 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது மீதம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களின் எழுச்சியை பார்க்கும் பொழுது பாஜக இந்த முறை மிகப்பெரிய எண்ணிக்கையில் வெற்றி பெறும்.

தற்போது வரை இந்தியா முழுவதும் 335 இடத்தை பாஜக தாண்டியுள்ளதாக தற்பொழுது நாங்கள் கணித்துள்ளோம். நிறைய இடங்களில் கடுமையான போட்டிகள் நடந்துள்ளது. பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரிய தலைவர்கள் போட்டியிட்டு உள்ளன. பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் சேர்ந்து தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

எதிர்ப்பதை மட்டுமே முழு நேர செயலாக வைத்து ஒரு நடிகர் (பிரகாஷ்ராஜ்) செயல்பட்டு வருகிறார். பெங்களூருவில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தது தான் பிரகாஷ்ராஜ் அவர்களின் அரசியல் அனுபவம். மோடி எதிர்ப்பு என்பதன் ஒரே காரணமாக பிரகாஷ்ராஜ் பாஜக’க்கு எதிரான கருத்துக்களை அவர் தெரிவித்து வருகிறார்.

ஆண்டவன் எனக்கு என்ன வேலையை கொடுத்துள்ளானோ அதனை தான் செய்துள்ளதாக பிரதமர் மோடி ஹிந்தியில் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை திரித்து மாத்தி எதிர்க்கட்சியினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சனாதனத்தை திருத்தி மாத்தி பல்வேறு கருத்துக்களை திமுக மற்றும் அதன் கூட்டணியினர் தெரிவித்து வருகின்றனர். கருத்துரிமையை நசுக்கி ஆட்சி செய்யும் மு.க ஸ்டாலின் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள திருமாவளவன் கருத்துரிமை குறித்து கூறுவதற்கு உரிமை இல்லை.

நாங்கள் எதிர்ப்பது Relegion bassed reservation. முஸ்லிம் என்பதன் அடையாளத்திற்காக மட்டுமே ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவதை நாங்கள் எதிர்க்கிறோம். ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாவாதி. இந்துத்துவம் என்பது மதம் சார்ந்த அடையாளம் அல்ல, அது வாழ்வியல் முறை. அனைவரையும் அரவணைப்பதுதான் இந்துத்துவா.

1984 ஜூலை 24 ஆம் தேதி ஆர்டிக்கல் 370ஐ நீக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வாதிட்டுள்ளார் ஜெயலலிதா. 1993ல் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக அதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. 2003ல் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஆனால் இதனை அனைத்தையும் தற்போது அதிமுக’வினர் எதிர்த்து வருகிறது. இதுகுறித்து அதிமுகவினுடன் விவாதிக்க பிஜேபியினர் தயாராக உள்ளோம். இதன் அடிப்படையில் ஜெயலலிதா அவர்கள் இந்துத்துவா தான் என்று சொல்வது சரி.

ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால் ராமர் கோயிலுக்கு முதல் ஆளாக மகிழ்ச்சியாக சென்றிருப்பார். கர்நாடகாவிற்கு அணை கட்ட உரிமை இல்லை. கர்நாடகா அணைக்கட்டும் விவகாரத்தில் மத்திய ராணுவத்தை கூப்பிட வேண்டும் என்று கூறும் காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் பின் எதற்காக கட்சி நடத்தி வருகிறது? நாடக நடிகர்கள் போன்று காங்கிரஸ் கட்சியினர் நடித்து வருகின்றனர், என தெரிவித்துள்ளார்.

Views: - 248

0

0