இது கூட முதலமைச்சருக்கு தெரியாதா..? சரி, இருக்கட்டும் 1000 தடுப்பணைகள் எங்கே..? அண்ணாமலை கேள்வி

Author: Babu Lakshmanan
3 May 2024, 7:39 pm

திமுக ஆட்சிக்கு வந்ததும், 1000 தடுப்பணைகள் கட்டுவோம் என கூறிவிட்டு இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம் முழுவதும் அணை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போனதால், குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் இறங்கி, குடிநீர் கேட்டு போராட்டம் நடத்த துவங்கி விட்டனர்.

மேலும் படிக்க: நெருக்கடியில் சிக்கிய EPS, அண்ணாமலை… தேர்தல் களத்தில் திடீர் ட்விஸ்ட்..!

இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பது முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் தெரியாதா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :- நிரந்தர தீர்வை நோக்கிய ஒரு தொலைநோக்கு திட்டத்தையாவது இதுவரை திமுக அறிவித்துள்ளதா..?. மழைநீர் சேகரிக்க நீர்நிலைகளை தூர்வார, சீரமைக்க கவனம் செலுத்தாததே நீர் பற்றாக்குறை ஏற்பட காரணம்.

புதிய நீர்நிலை உருவாக்குதல், தடுப்பணைகள் கட்டினால் அடுத்து வரும் மழைக்காலத்தில் நீர் சேமிக்க முடியும். திமுக ஆட்சிக்கு வந்ததும், 1000 தடுப்பணைகள் கட்டுவோம் என கூறிவிட்டு இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை காங்கிரசிடம் முழுமையாக அடகு வைத்துவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!