செந்தில் பாலாஜிக்கு மட்டும் தனிச்சட்டமா..? தமிழக மக்களை ஏமாளிகளாக்கும் திமுக அரசு… அண்ணாமலை சாடல்!!
Author: Babu Lakshmanan21 ஜூன் 2023, 2:28 மணி
செங்கல்பட்டு ; திருவாரூர் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு நிதிஷ்குமார் வராதது இந்திய அளவில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதைதான் காட்டுவதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழக பா.ஜ.க. சார்பில் நடந்த யோகா தின விழாவில் கலந்து கொண்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- வருகிற 2024ல் நடக்கும் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி எந்தவித சூழ்நிலையிலும் ஜெயிக்க முடியாத வாய்ப்பு இல்லாத சூழல் உள்ளது. அதை மறைக்க முதல்வர் அவர்கள் ஏதோதோ பேசி மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.
நேற்று திருவாரூரில் நடந்த கூட்டமே அதற்கு சாட்சி. முதலில் ஜனாதிபதி வருவதாக சொன்னார்கள். அவர்கள் ஏதோ காரணத்திற்காக வரவில்லை. இந்தியாவில் எதிர்க்கட்சிகளை இணைத்து கொண்டிருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வருவதாக சொன்னார்கள். அவரும் வரவில்லை. கடைசியாக கருணாநிதி பேரன் வயதில் இருக்க கூடிய தேஜஸ்வியாதவ்-வை (பீகார் துனை-முதல்வர்) வரவழைத்து, இந்த கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்துள்ளார்கள்.
அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முடியவில்லை என்பது நேற்று நிதிஷ்குமார் வராததே நமக்கு ஒரு சமிக்ஜையாக தெரிகிறது. இப்பொழுது கூட எதிக்கட்சிகளை ஒருங்கிணைப்பது என்பது அவர்கள் கனவாகவே மட்டுமே இருக்கும். தமிழகத்தில் பாரதீய ஜனதாவை பெரிய அளவில் மக்கள் விரும்ப ஆரம்பித்து விட்டார்கள். 3வது முறையாக 400 எம்.பி.க்கள் பெற்று மோடி அவர்கள் பிரதமராக வருவார். தமிழகத்தில் கூட 39-க்கு 39 எம்.பி.க்கள் நமக்கு கிடைப்பார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
0
0