ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாத ஊதியத்தை மறுக்காத திமுக அரசு, காவலர்களுக்கான உணவுப்படியை மட்டும் நிறுத்தி வைப்பதா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில், காவலர்களுக்கு, கடந்த ஜனவரி மாதம் முதல் வரை உணவுப் படி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நாள் ஒன்றுக்கு 300 வீதம், ஒவ்வொரு மாதமும் 26 நாட்களுக்கு ரூபாய் 7800 என்ற முறையில் ஒவ்வொரு காவலருக்கும் சுமார் 45 ஆயிரம் ரூபாய் வரை உணவுப் படி வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளார்கள்.
ஊழல் செய்து சிறையில் இருக்கும் அமைச்சருக்கு மாத ஊதியத்தை மறுக்கவோ, தாமதப்படுத்தவோ செய்கிறதா இந்த ஊழல் திமுக அரசு? தன்னலமின்றி, நேரம் காலம் நோக்காமல், பொதுமக்களைப் பாதுகாக்க ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு, ஜனவரி மாதம் முதல், ஐந்து மாதம் இருபது நாட்களுக்கான உணவுப்படியை வழங்காமல் மறுப்பதும், ஜூன் 20 ஆம் தேதியிலிருந்து வழங்குவதாகச் சொன்ன உணவுப்படியை வழங்காமல் தாமதப்படுத்துவதும் அவர்களுக்கு இந்த அரசு செய்யும் அநீதியாகும்.
உடனடியாக, ஆவடி மற்றும் தாம்பரம் ஆணையகக் காவலர்களுக்கான உணவுப் படியை, ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு மொத்தமாக வழங்க வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாவலர்களான காவல்துறையினரை வஞ்சிக்க வேண்டாம் என்றும் தமிழக பாஜக சார்பாக திமுக அரசை வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.