‘ஐயயோ… அது பெரிய இடமாச்சே’… திமுக எம்பி ஆ.ராசாவின் பேச்சை கேட்டு பதறும் ஜாபேர் சேட்… 4வது ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை

Author: Babu Lakshmanan
17 February 2024, 4:15 pm

2ஜி வழக்கு தொடர்பாக தமிழகத்தின் உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாபர் சேட்டுடன் திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சரமான ஆ.ராசா பேசியதாகக் கூறப்படும் ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

தமிகத்தை ஆளும் திமுக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறார். இந்த சூழலில் ஏற்கனவே திமுக பைல்ஸ் என்று திமுக ஊழல் பட்டியலை இரு கட்டங்களாக வெளியிட்டிருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கடந்த பொங்கலன்று முன்னாள் உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட்டுடன் திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, ஆ.ராசா மற்றும் முன்னாள் தலைமை செயலர் சண்முகநாதன் உள்பட பலரின் ஆடியோக்கள் எனக் கூறி, அடுத்தடுத்து வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார் அண்ணாமலை.

தற்போது, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், DMK FILES PART-3 என்ற பெயரில் 2ஜி ஊழல் தொடர்பான 4வது ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அந்த ஆடியோவில் 2ஜி விசாரணைக்கு மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் வருவதற்கு முன்பே, திமுக எம்பி ஆ.ராசாவுக்கு தகவல் வந்துள்ளதை, தமிழக உளவுத்துறை முன்னாள் உயரதிகாரி ஜாபர் சேட்டுடன் அவர் பேசும் உரையாடல் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் திமுக எம்பி கேசி பழனிசாமி மற்றும் ஆ.ராசாவின் உறவினர்களிடம் விசாரணை நடத்த மத்திய புலனாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளதாக திமுக எம்பி ஆ.ராசா கூறுகிறார். தற்போது, இந்த ஆடியோ வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 400

    0

    0