மைக் இருப்பதை மறந்து உளறிக் கொட்டிய அமைச்சர் கேஎன் நேரு… திமுவுக்கு பணம் தான் எல்லாமே… அண்ணாமலையிடம் சிக்கிய வீடியோ ஆதாரம் !!

Author: Babu Lakshmanan
30 January 2023, 1:25 pm

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக அமைச்சர் கேஎன் நேரு பேசும் வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவால் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

EVKS - Updatenews360

திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில், ஆளும் திமுகவின் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துச்சாமி பேசிக்கொண்டிருந்த போது, மேடையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம், அமைச்சர் கேஎன் நேரு மும்முரமாக பேசிக் கொண்டிருந்தார்.

அதாவது, “அவன் என்னாத்துக்கு அவன் தண்டம். மந்திரி எல்லாம் கூடாது. தேவையில்லை. நான் நேத்தே சொல்லிட்டேன். எல்லா பயலுங்களும் வந்துடுங்கனு சொல்லிட்டேன். நான் கண்டுக்க மாட்டேன், நீங்க அங்க இருங்க. சொல்லனும்னு நினைச்சேன். நீ காசு பணம் எல்லாம் குடுக்கனும், எல்லா மாவட்ட தலைவரையும் கூப்பிட்டு, பிளாட்டினம் மஹால்ல மதியம் எல்லோரையும் கூப்பிட்டு பணம் குடுத்து செட்டில் பண்ணிட்டு, 30,31ம் தேதி 1ம் தேதிக்குள்ள எல்லாத்தையும் பண்ணி முடிச்சுடனும்.

31 பூத்திலையும் 10,000 பேர் ரெடி பண்ணனும். நாளைக்கு தலைவர் ஸ்டாலினே அதிகாரிகளுக்கு வாட்ச், பிரியாணி தர போறாரு. இப்போ நான் புறப்பட்டு திருச்சி போய் அங்கிருந்து சென்னை போய், அங்க கூட்டத்தை முடிச்சுட்டு கோயம்புத்தூர் போய் 31ம் தேதி ராத்திரி இங்கு வந்திருவேன்.

எல்லாத்தையும் முடிச்சுட்டேன். பழனி அண்ணன் வரதையும், மகேஷ் வந்தா பார்ப்போம் இல்லை நம்மலே பண்ணிடுவோம். நாசர் 5க்கு மேல வேண்டாம் வேண்டாம் என்கிறான். நாசர்னு போட்டா சங்கடப்பட்டு கிடக்கிறான். அங்க இருக்கற லோக்கள் ஆளுங்க அண்ணங்கனாலே, விடுதலை சிறுத்தைகள் பார்த்துப்பாங்க.. அவன் எங்கல்லாம் கொடுக்கலையோ பார்த்து கொள்ளுங்க. ஆனால், நம்ம குடுத்து விடலாம். நான் கொடுத்துவிட்டேன். செந்தில் பாலாஜியும் கொடுத்து விட்டார். ஏன், அவன இங்க உட்கார வைக்கணுமா..?, என கூறினார்.

இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக அமைச்சர் கேஎன் நேரு, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் கூறியதாகவும், பணத்தை நம்பியே திமுக இருப்பதாகவும், பணம் இருந்தால் எதையும் வாங்கி விடலாம் என்ற நினைப்பு அவர்களிடம் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 490

    0

    0