மேடையில் திடீரென தனது போட்டோவை கிழித்தெறிந்த அண்ணாமலை : ஷாக்கான தொண்டர்கள் ..!!

Author: Babu Lakshmanan
8 March 2023, 7:54 pm

கோவை : மேடையில் தனது புகைப்படத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீரென கிழித்து எறிந்ததால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை விமான நிலையம் அருகே உள்ள சித்ரா ஆடிட்டோரியத்தில் பாஜக சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் பெண்மையை போற்றுவோம், மாதர்களின் ஒற்றுமை மலரட்டும், கலந்துரையாடுவோம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

முன்னதாக மேடைக்கு வந்த அவர், மைக் பெட்டியில் தனது புகைப்படத்துடன் ‘பெண்மையை போற்றுவோம்’ என்ற வாசகங்களோடு ஒட்டியிருந்த போஸ்டரை அவரே அகற்றினார். இதனால் அங்கிருந்த மகளிர் சற்று நேரத்தில் அரண்டு போயினர்.

மகளிர் தினத்தன்று பெண்களின் புகைப்படத்தை போடாமல், ஒரு ஆணின் புகைப்படத்தை அந்தப் போஸ்டரில் போட்டிருந்ததால் அவர் அப்படி செய்ததாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.

  • Aamir Khan Quit Smoking for Son மகனுக்காக அதை பண்ண ரெடி…பட விழாவில் அமீர் கான் பரபர பேச்சு..!
  • Views: - 503

    0

    0