ஒரு குடும்பப் புகழை மட்டும் பாடும் திமுக… உண்மைகளை தொடர்ந்து வெளியிடுவேன் ; அண்ணாமலை வெளியிட்ட பதில் வீடியோ!!

Author: Babu Lakshmanan
26 April 2023, 9:44 pm

அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து விபரங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அது முதற்கொண்டு, தங்கள் மீது அவதூறு பரப்பியதாக திமுகவினர், அண்ணாமலைக்கு இழப்பீடு கேட்டு அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.

இருப்பினும், அனைத்தையும் சட்டட ரீதியாக சந்திக்க தயார் என அண்ணாமலை திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார். இந்த நிலையில், திமுகவை புகழ்ந்தும், பாஜகவை இழிவாக பேசுவது போன்ற அண்ணாமலையின் ஆடிய சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, அவர் பேசிய முழு வீடியோவை பகிர்ந்த அண்ணாமலை, திமுகவினரின் தனது பேச்சை வெட்டி, ஒட்டி சதி வேலையை பார்த்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது:- தொழிற்சாலைகளை காட்டிலும் அரசியல் லாபகரமானதாக இருக்கும் எந்த நாடுகளும் வளர்ச்சியடைந்ததில்லை. அதேபோல, தொழிலதிபர்களை காட்டிலும் அரசியல்வாதிகள் செல்வம் மிக்கவர்களாக இருந்தால், அவர்கள் நாட்டில் வறுமையை உருவாக்குகிறார்கள், என்ற சொல் திமுகவினருக்கு கச்சிதமாக பொருந்தும். திமுக முதல் குடும்பத்திற்கு எதிரான ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், படித்த நபரின் மூலம் தனக்கு ஆதரவாக பேச வைத்துள்ளார்கள். இதன்மூலம், முதல் குடும்பத்தை கடந்து சிந்திக்காத கட்சியாக திமுக இருப்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும்.

நிதியமைச்சர் தனது சொந்த தகுதியால் எதையும் சாதிக்காமல், தனிப்பட்ட ஆதாயங்களுக்காக தனது அரசியல் அதிகாரத்தை வளைக்கும் குடும்பத்தில் பிறந்ததால் மட்டுமே தமிழக முதல்வரின் மகனைப் புகழ்ந்து பாடும், சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக இருக்க வேண்டிய கட்டாம் ஏற்பட்டுள்ளது. முதல் குடும்பத்தின் இளவரசனை அடுத்த தலைமுறையின் நம்பிக்கை என்று அழைக்க எப்படி மனம் வந்தது.

அதேவேளையில், நாங்கள் வெளியிட்ட ஆடியோ டேப்பில் இருக்கும் தகவல்கள் பற்றியும், நிதியமைச்சரின் ஆடியோ விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். தன்னைப் பற்றி திமுக ஐடி விங் வெளியிட்ட ஆடியோ தொடர்பான உண்மை வீடியோவை வெளியிட்டுள்ளேன். உங்களைப் பற்றிய ஊழல்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Ajith Kumar Team Racing Challenges துபாய் ரேஸில் பல திக் திக் சவால்ககளை எதிர்கொள்ள போகும் அஜித் குழுவினர்… 24 மணி நேரம் எப்படிங்க..!
  • Views: - 397

    0

    0