2018-ல் ஆளுநரிடம் நீங்க என்ன கேட்டீங்க…? திமுகவின் நாடகம்… செந்தில் பாலாஜி தப்பிக்க முடியாது ; ஆதாரத்துடன் அண்ணாமலை அட்டாக்..!!
Author: Babu Lakshmanan30 ஜூன் 2023, 3:30 மணி
ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ஆர்என் ரவி நேற்று உத்தரவை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட ஆளும் கூட்டணி கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், சிறிது நேரத்தில் அந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் ஆளுநர் ஆர்என் ரவி மறு அறிவிப்பை வெளியிட்டார். ஆளுநரின் இந்த செயலை விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், தனக்கு அதிகாரம் இல்லை என்பதை ஆளுநர் உணர்ந்து விட்டதாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த சூழலில், 2018ல் திமுக எதிர்கட்சியாக இருந்த போது, அக்கட்சியின் தலைவரான ஸ்டாலின், விடுத்துள்ள டுவிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அந்தப் பதிவில், “தன் மீது ஊழல் வழக்குகள் இருப்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குட்கா புகழ் அமைச்சரை டிஸ்மிஸ் செய்யத் தயங்கினால், மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் உடனடியாக அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், “ஊழலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்வதோடு, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்,” என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஸ்டாலினின் இந்தப் பதிவை பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “2018ம் ஆண்டு எதிர்கட்சி தலைவராக இருந்த போது முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை இங்கு நியாபகப்படுத்த விரும்புகிறோம்..?
ஏன் இந்த மாற்றம்..? இது முதலமைச்சர் ஸ்டாலினின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. திமுகவின் இந்த நாடகத்தால் செந்தில் பாலாஜி குற்றவாளி என்னும் உண்மையை மாற்றி விட முடியாது,” என தெரிவித்துள்ளார்.
0
0