கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்… சம்பாதிப்பதை குறியாக வைக்கும் திமுகவுக்கு இதைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை ; அண்ணாமலை அதிரடி!!

Author: Babu Lakshmanan
18 November 2023, 9:37 pm
Annamalai STalin - Updatenews360
Quick Share

காங்கிரஸ்‌ கூட்டணியில்‌ பத்து ஆண்டுகள்‌ மத்தியில்‌ ஆட்சியில்‌ இருந்தபோது, சம்பாதிக்க வசதியான அமைச்சர்‌ பதவிகள்‌ வாங்குவதில்‌ குறியாக இருந்த திமுகவினருக்கு, இது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- எப்போதெல்லாம்‌ தமிழகத்தில்‌ திமுகவின்‌ அலங்கோல ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள்‌ கோபக்‌ குரல்‌ எழுப்புகிறார்களோ, அப்போதெல்லாம்‌ திமுக முன்வைக்கும்‌ மடைமாற்றுத்‌ தந்திரங்கள்‌, இந்தி எதிர்ப்பு மற்றும்‌ இந்து மத எதிர்ப்பு. மறைந்த கருணாநிதி முதன்முதலாக ஆட்சிக்கு வந்த நாளில்‌ இருந்து தொடங்கிய இந்த மடைமாற்று உத்திகளுடன் அர்த்தமற்ற ஆளுநர்‌ எதிர்ப்பையும்‌ கூடுதலாகச்‌ சேர்த்திருக்கிறார்‌ முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌.

இருபத்தைந்து ஆண்டுகளாகக்‌ கையகப்படுத்தி வைத்திருந்த விவசாய நிலங்களைப்‌ பயன்படுத்தாமல்‌, அவற்றைத்‌ தரிசு நிலமாக்கி, இப்போது யாருக்கும்‌ பயன்படாத நிலையில்‌, ஊர்மக்களிடம்‌ திருப்பிக்‌ கொடுத்து விட்டோம்‌ என்று மார்தட்டிக்‌ கொள்ளும்‌ முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌, நேற்றைய தினம்‌, திமுக அரசுக்கு எதிராகப்‌ போராடிய திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள்‌ மீது குண்டர்‌ சட்டத்தில்‌ வழக்கு தொடர்ந்து, மூக்குடைபட்ட தோல்வியை திசைதிருப்ப, கடந்த 2022 ஆம்
ஆண்டே நீர்த்துப்‌ போன, பல்கலைக்‌ கழக துணைவேந்தர்கள்‌ நியமனம்‌ ஒதாடர்பான பிரச்சினையை மீண்டும்‌ ஒரு முறை
முன்வைத்திருக்கிறார்‌.

நாள்தோறும்‌ சீர்குலையும்‌ சட்டம்‌ ஒழுங்கு பற்றியோ, மதுவால்‌ ஏற்படும்‌ தொடர்‌ மரணங்கள்‌ இயற்றியோ, முடங்கிப்‌ போயிருக்கும்‌ தொழில்துறை பற்றியோ, பொதுமக்களை நேரடியாகப்‌ பாதிக்கும்‌ விலைவாசி உயர்வைப்‌ பற்றியோ கவலை இல்லாமல்‌, திமுகவுக்கு வருமானம்‌ வரும்‌ வழிகளில்‌ மட்டுமே முதலமைச்சர்‌ கவனம்‌ செலுத்திக்‌ கொண்டிருக்கிறார்‌.

கடந்த 1994 ஆம்‌ ஆண்டு, அன்றைய முதலமைச்சர்‌ செல்வி. ஜெயலலிதா கொண்டு வந்த, பல்கலைக்கழகங்களின்‌ வேந்தராக முதலமைச்சர்‌ இருப்பார்‌ என்ற சட்டத்திற்கு, அன்றைய ஆளுநராக இருந்து அமரர்‌ சென்னாரெட்டி ஒப்புதல்‌ அளிக்க மறுத்தார்‌. திமுகவைப்‌ பொறுத்தவரை, இந்த சட்டமே தேவையற்றது என்று கூறினார்‌ திமுக தலைவர்‌ கருணாநிதி. 1996 ஆம்‌ ஆண்டில்‌ திமுக ஆட்சிக்கு வந்த உடனே, அன்றைய கல்வித்‌ துறை அமைச்சரும்‌, திமுகவின்‌ நீண்ட கால பொதுச்‌ செயலாளருமாக இருந்த போராசிரியர்‌ அன்பழகன்‌, “முதலமைச்சர்‌ வேந்தரானால் பல்கலைக்கழகங்களின்‌ தன்னாட்சி அதிகாரம்‌ கேள்விக்குறியாகி விடும்‌. பல்கலைக்கழகங்கள்‌ சுதந்திரமாக செயல்படுவதற்கு குந்தகம்‌ விளைவிக்கும்‌ என்றும்‌ குறிப்பிட்டு அந்தச்‌ சட்டத்தைத்‌ திரும்பப்‌ பெற்றார்‌.

தற்போது அதே போன்ற சட்டத்தை திமுக மீண்டும்‌ கொண்டு வர முயற்சிப்பது நகைப்பிற்குரியது. ஆனால்‌, திமுகவின்‌ அரசியல்‌ வரலாறே இது போன்ற அந்தர்‌ பல்டிக்களால்‌ ஆனது என்பதால்‌, இதில்‌ ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும்‌ இல்லை.

மேற்கு வங்க மாநில விஸ்வபாரதி மத்தியப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வேந்தராக, மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ திரு. நரேந்திர மோடி அவர்கள்‌ இருக்கிறார்‌ என்று குறிப்பிட்டிருக்கிறார்‌ உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ பொன்முடி அவர்கள்‌.

விஸ்வபாரதி பல்கலைக்‌ கழகத்தின்‌ 1951 ஆம்‌ ஆண்டு சட்டப்படி, அதன்‌ வேந்தராக பாரதப்‌ பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்‌. முதல்‌ பிரதமர்‌ நேரு தொடங்கி, முன்னாள்‌ பிரதமர்கள்‌ இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, மன்மோகன்‌ சிங்‌ வரையிலும்‌ விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின்‌ வேந்தர்‌ பொறுப்பில்‌ இருந்தவர்களே. காங்கிரஸ்‌ கூட்டணியில்‌ பத்து ஆண்டுகள்‌ மத்தியில்‌ ஆட்சியில்‌ இருந்தபோது, சம்பாதிக்க வசதியான அமைச்சர்‌ பதவிகள்‌ வாங்குவதில்‌ குறியாக இருந்த திமுகவினருக்கு, இது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

புதிய கல்விக்‌ கொள்கையின்படி மூன்றாம்‌ வகுப்பு, ஐந்தாம்‌ வகுப்பு மற்றும்‌ எட்டாம்‌ வகுப்புகளுக்கு நுழைவுத்‌ தேர்வுகள்‌ நடத்தப்படும்‌ என்ற பொய்யான தகவலை அமைச்சர்‌ பொன்முடி இன்று சட்டசபையில்‌ பதிவு செய்திருக்கிறார்‌. புதிய கல்விக்‌
கொள்கையின்‌ வகுப்பு 4.40ன்‌ படி, இந்தத்‌ தேர்வுகள்‌, கல்வித்‌ திட்டத்தையும்‌ கற்பித்தல்‌-கற்றல்‌ முறைகளையும்‌, பத்தாம்‌ வகுப்பிலோ பன்னிரண்டாம்‌ வகுப்பிலோ மட்டுமே அளவிடாமல்‌, படிப்படியாக அளவிட்டு கல்வித்தரத்தை மேம்படுத்தவே அன்றி, மாணவர்களுக்கான நுழைவுத்‌ தேர்வு அல்ல என்பது தெளிவாகக்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்‌, மாணவ சமுதாயத்திடம்‌ அச்சத்தை விதைக்கும்‌ வேலையையே திமுகவினர்‌ தொடர்ந்து செய்து வருகின்றனர்‌.

இன்றைய தினம்‌ சட்டசபையில்‌ தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள்‌, திமுக அரசு கொண்டு வந்த சற்றும் ‌பொருத்தமற்ற சட்ட மசோதாவுக்குக்‌ கடுமையான எதிர்ப்பைப்‌ பதிவு செய்து, வளிநடப்பு செய்திருக்கிறார்கள்‌. திமுகவின்‌ அற்ப அரசியல்‌ லாபங்களுக்காக, தமிழக மாணவர்களின்‌ எதிர்காலத்தைப்‌ பலிகொடுக்க தமிழக பாஜக எந்தக்‌ காலத்திலும்‌ அனுமதிக்காது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 243

    0

    0