திமுகவின் கவுண்ட்டவுன் ஆரம்பம்… சாதிகளை தூண்டிவிட்டு பிழைப்பு நடத்துவது தான் திராவிட மாடல் ; அண்ணாமலை விளாசல்…!!
Author: Babu Lakshmanan9 November 2023, 10:37 am
திமுக பயந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்களது நாட்களை மக்கள் என்ன ஆரம்பித்து விட்டார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையை நடத்தினார். திருச்சியில் இதன் 3வது நாளான இன்று உறையூர் நாச்சியார் கோவிலில் இருந்து புறப்பட்டு சாலை ரோடு, கே.டி ஜங்ஷன், மெயின்காட்கேட். சிங்காரத்தோப்பு, மேலபுலிவார்டு ரோடு, மரக்கடை வழியாக காந்தி மார்க்கெட் வந்து அடைந்தது.
பின்னர் அண்ணாமலை பேசியதாவது :- தமிழகத்தில் 2026இல் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம். 2024ல் 400 இடங்களை பெற்று மத்தியிலே மோடி ஆட்சி அமைப்பார். அப்பொழுது தமிழகத்தில், திருச்சியில் வளர்ச்சி உண்டாயிருக்கும். இப்போது இருக்கும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியின் வளர்ச்சியை குறித்து சிந்திப்பதே இல்லை, என பேசினார்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, பெரியார் சிலையை அகற்றுவேன் என்று கூறினீர்களா அதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டார்களா என்ற கேள்விக்கு, நாங்கள் இன்று தெளிவாக சொல்லி விட்டோம். கோயிலுக்கு வெளியே யார் இருக்க வேண்டும், மற்ற தலைவர்கள் தமிழகத்தில் எங்கே இருக்க வேண்டும், பெரியார் அவர்களை பொறுத்தவரை பாரதி ஜனதா கட்சி உடைய நிலைப்பாடு என்னவென்று பொதுக்கூட்டத்தில் பேசி உள்ளேன். நம்மை பொறுத்தவரை 2026க்கு மக்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுக்கிறோம்.
பாரதிய ஜனதா கட்சி என்றால் என்ன, எதற்காக பாரதிய ஜனதா கட்சி இருக்க வேண்டும், அந்த வாய்ப்புக்கு வாக்களிக்க போகிறார்கள். ஆனால், திமுக பயந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நாட்கள் என்ன மக்கள் ஆரம்பித்து விட்டார்கள்.
அவர்களது திட்டமே ஒரு விஷம். மதத்தை வைத்து அரசியல் நடத்துவது, ஜாதிகளை தூண்டிவிட்டு பிழைப்பை நடத்துவது திமுகவின் 70 ஆண்டு கால திராவிட அரசியல், நான் எல்லா இடத்திலும் பேசுகிறேன். புள்ளி விவரத்தோடு பேசுகிறேன். தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை எப்படி இருக்கிறது என்று பேசுகிறேன். எல்லா ஓட்டைகளும் மக்களுக்கு முன்பாக வைக்கிறேன். மக்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறோம்.
எங்களுக்கு தெரியும். ஒரு இந்து எந்த மதத்திற்கும் எதிரானவன் கிடையாது, என்னை உட்பட. அதே நேரம் அந்த இந்துவுக்கு கோயிலுக்குச் சென்று வழிபடும் போது, எப்படி செல்ல வேண்டும் என ஆசையும் இருக்கும். அதற்கு வாய்ப்பை கொடுக்கிறோம். அதை ஜனநாயக ரீதியிலே செய்ய வேண்டும் என நினைக்கிறோம். அது 2026 செய்து காட்டுவோம், என தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதியும், கனிமொழியும் ஆட்சிக்கு வந்தால் பார்ப்போம் என கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு, அதற்கு 2026 வரை காத்திருக்கணும், 2026 வரை அலாரம் வைத்து காலண்டரில் எழுதி வைக்க வேண்டும். 2026 தேர்தல் முடிந்த பிறகு இது நடக்கத்தான் போகிறது என தெரிவித்தார்.
0
0