‘எனக்கு 65 ஆண்டு அரசியல் அனுபவம் இருக்கு… இப்ப CHEAP-ஆயிட்டேனா..?’ கொக்கரித்த டிஆர் பாலு… அண்ணாமலை கொடுத்த கூல் ரிப்ளை..!!

Author: Babu Lakshmanan
7 February 2024, 12:47 pm

அண்ணாமலைக்கு பதில் சொல்லும் அளவுக்கு CHEAP-ஆயிட்டேனா..? என்று திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்திய அமைச்சராக இருப்பதற்கே தகுதியில்லாதவர் என்று திமுக எம்பி டிஆர் பாலு பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. பட்டியலின அமைச்சர் ஒருவரை இப்படி பேசலாமா..? என்று அவருக்கு எதிராக கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

குறிப்பாக, அமைச்சர் எல்.முருகன் குறித்து இழிவாக பேசிய திமுக எம்பி டிஆர் பாலு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவரிடம் அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால், கடுப்பான எம்பி டிஆர் பாலு கூறியதாவது :- அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்ற அளவுக்கு, நான் அவ்வளவு CHEAP-ஆ போய்ட்டனா உங்களுக்கு..? அவங்க எல்லாம் SMALL TIME PEOPLE.. அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. 65 ஆண்டுகள் அரசியல் அனுபவம்… அண்ணாமலைக்கு பதில் சொல்லுற அளவுக்கு தாழ்ந்து போயிட்டனா..?

பாராளுமன்ற விதிமுறைகளை மதிக்காமல் நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடைமறித்து பேசியதால் இடைமறித்து பேசியதை கண்டித்து தவிர அவரை எந்த ஜாதி ரீதியாகவும் நான் பேசவில்லை. தயவு செய்து என்னிடம் அண்ணாமலையை பற்றி கேள்வி கேட்காதீர்கள். ராமர் கோவில் கட்டி விட்டால் இந்துக்களுக்கும், தலித்துக்களுக்கும் அவர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. அவர்களை எதிர்த்து கேள்வி கேட்ட ராஜா தலித் இல்லாமல் யார்?

பேரிடர் குறித்து கேள்வி போய் கொண்டிருக்கும் பொழுது சம்பந்தமே இல்லாமல் மீன்வளத்துறை துணை அமைச்சர் பேசியதால்தான் இந்த பிரச்சனை உருவானது. அவை விதிமுறைகள் தெரியாமல் நடந்து கொண்டார். சம்பந்தமே இல்லாமல் தலித் தலித் என்று கூறிய அரசியல் செய்கிறார்கள். நாங்கள் தலித்துக்கு விரோதிகள் அல்ல. ஒருவன் அரசியலுக்கு வந்தால் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாமா..? அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை..?, எனக் கூறினார்.

டிஆர் பாலுவின் இந்தப் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது X தளத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- நீங்கள் மலிவான மனிதரா..? என்பதை உங்கள் 65 வருட அரசியல் வாழ்க்கை தீர்மானிக்காது. உங்களுடைய சிந்தனையும் செயல்பாடுகளுமே தீர்மானிக்கும் என்பதை திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கு மிகப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் கூறினார்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!