அணையப் போகும் விளக்கு பிரகாசமகத்தான் எரியும்… ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி!!

Author: Babu Lakshmanan
31 May 2024, 10:40 am

எந்தக் கட்சி இருக்கும், எது காணாமல் போகும் என்பது ஜூன் 4ம் தேதிக்கு பின் தெரியும் என்றும், விளக்கு அணைவதற்கு முன் பிரகாசமாக இருப்பது வாடிக்கைதான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கானாடுகாத்தான் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வந்தார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது :- ஏற்கனவே திருமயத்திற்கு சாமி கும்பிட வருவதாக அளித்த உத்திரவாதத்தை நிறைவேற்றவே அமித் ஷா தமிழகம் வந்தார். நாடாளுமன்ற தேர்தல் துவக்கத்தின் போதும் தேர்தல் இறுதி பரப்புரையின் நிறைவு செய்யும் போதும் மோடி மற்றும் அமித்ஷா வந்தது தமிழகத்தின் மீது அவர்கள் காட்டும் மரியாதையை வெளிப்படுத்துகிறது.

மேலும் படிக்க: ஆட்டுப்பட்டியில் ஒரு ஜம்ப்… ஆட்டின் கழுத்தை பிடித்து குதறிய சிறுத்தை.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திராவிற்கு சொந்தமான விவேகானந்தா பாறைக்கு தியானம் செய்யத்தான் பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். இது அவரது தனிப்பட்ட நிகழ்ச்சி. இந்துத்துவா என்பது எந்த மதத்திற்கும் எதிரி கிடையாது. இந்துத்துவாவை பற்றி மக்கள் மன்றத்தில் விவாதிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஜூன் 4 தேர்தல் முடிவுக்குப் பிறகு எந்த கட்சி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். விளக்கு அணைவதற்கு முன் பிரகாசமாக இருப்பது போல் ஜெயக்குமார் பேசி வருகிறார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைத்து உள்ளோம். முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம், என தெரிவித்தார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!