சத்துணவு முட்டைகள் குறித்து அமைச்சர் கொடுத்த விளக்கம்… சினிமா பட காமெடி என அண்ணாமலை கிண்டல்…!!

Author: Babu Lakshmanan
15 November 2023, 5:02 pm

சத்துணவில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் குறித்து அமைச்சர் கீதாஜீவன் கொடுத்த விளக்கத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம், சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் தொடர்ந்து சர்ச்சைகளாக்கப்பட்டு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், இது குறித்து பாஜக கட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விநியோகிப்பாளரிடம் பேசி 96 முட்டைகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் பேசி மாற்றி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து விநியோகிப்பாளருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. பின்பு அந்த முட்டைகள் உணவு பாதுகாப்பு துறை மூலம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தமிழக அரசு திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் விநியோகிக்கப்படும் முட்டைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலர் வைக்க வேண்டும் என 2006ம் ஆண்டு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய நாளில் கருப்பு கலர் முட்டை மீது வைக்கப்பட்டு தமிழக அரசு முத்திரை அதில் இடப்பட்டிருந்தது. அன்றைய தினம் கடும் மழை தார்ப்பாய் இல்லாமல் வாகனம் வந்துள்ளது. முட்டைகள் எல்லாம் நனைந்து கருப்பு மை ஊறி அந்த கருப்பு கலர் அனைத்து முட்டைகளிலும் இறங்கியுள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்து அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. சிலர் எப்பொழுது குற்றச்சாட்டு கண்டுபிடிக்கலாம் என செயல்பட்டு இதை பூதாகரமாக ஆக்கியுள்ளனர். உண்மை நிலவரம் அப்படி அல்ல, முறையாக செயல்பட்டு வருகிறது. நல்லா அவித்த முட்டை தரமாக வழங்கப்பட்டு வருகிறது, என்றார். அவரது இந்த விளக்கம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, அமைச்சரின் இந்த விளக்கம் குறித்த வீடியோவை பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரது விளக்கத்தை கிண்டலடித்துள்ளார். அதாவது, அழுகிய முட்டைகள் மாணவர்களுக்கு வழங்கப்படாது என்று உத்தரவாதம் அளித்த அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், அழுகிய முட்டை குறித்து அவர் கொடுத்த விளக்கம் திரைப்படங்களில் வரும் நகைச்சுவையை போன்று இருப்பதாகக் கூறி கிண்டலடித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி