‘Dear சாம் பிட்ரோடா’… தென்னிந்தியர்கள் குறித்து கருத்து தெரிவித்த காங்., நிர்வாகி ; போட்டோவை போட்டு பதிலடி கொடுத்த அண்ணாமலை

Author: Babu Lakshmanan
8 May 2024, 4:31 pm

தென்னிந்தியாவைச் சேர்ந்த மக்கள் ஆப்ரிக்கர்கள் போல இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கூறியிருப்பதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவரும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரபூர்வ ஆலோசகராக இருந்த சாம் பிட்ரோடா, அண்மையில் சொத்துரிமை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, வரை பாஜக தலைவர்கள் முதல் பிரதமர் வரை அந்தக் கருத்தை எங்கு போனாலும் பேசி வருகின்றனர். ஆனால், அது சாம் பிட்ரோடாவின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் ஜகா வாங்கியது.

மேலும் படிக்க: சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா? கையில் கட்டுடன் கோர்ட்டில் ஆஜரானதால் பரபரப்பு.. VIDEO!

இந்த நிலையில், இந்தியர்கள் குறித்து சாம் பிட்ரோடா பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், . இந்தியாவின் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களாகவும், தெற்கே உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றமளிக்கிறார்கள் என்றும், இவர்களை ஒருங்கிணைத்த பெருமை காங்கிரசை சாரும் என்று கூறியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. சாம் பிட்ரோடாவின் இந்தக் கருத்து குறித்து பேசிய பிரதமர் மோடி, தோல் நிறத்தை வைத்து இந்தியர்களை மதிப்பிடுவது எனக்கு கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். அதேபோல, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய புகைப்படத்தை X தளத்தில் பதிவிட்டு, “Dear Sam Pitroda, I am a Dark-skinned Bharatiya,proud Bharatiya”! என பதிலடி கொடுத்துள்ளார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!