சாதிய வன்மத்தை தூண்டும் படங்களை எடுக்கும் உதயநிதி… பாராட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் ; அண்ணாமலை குற்றச்சாட்டு..!!
Author: Babu Lakshmanan15 August 2023, 2:32 pm
சாதி வன்மத்தை தூண்டும் படங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது ;- வன்முறையை தூண்டும்படி எடுக்கும் சாதிய படங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டுகிறார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சாதி ரீதியாக படம் எடுக்கிறார்கள். பல்வேறு இடங்களில் சாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பல படங்கள் எடுக்கப்படுகின்றன.
சாதிய வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். 2047-ல் இந்தியா வல்லரசு நாடாக கடுமையாக உழைக்க வேண்டும், எனக் கூறினார்.