தன் மீது அவதூறு பரப்பியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 14ம் தேதி அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட திமுகவின் முக்கிய புள்ளிகளின் சொத்து மதிப்பை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனிடையே, இந்த சொத்துப்பட்டியல் குறித்து கருத்து தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறினார். மேலும், திமுகவின் பல்வேறு தலைவர்கள் இது குறித்து கருத்துக்களை கூறி வந்த நிலையில், திமுக சார்பில் ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
திமுகவின் இந்த நடவடிக்கைக்கு அண்ணாமலையும் பதிலடி கொடுக்கும் விதமாக, 500 கோடியே ஒரு ரூபாய் கேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், மன்னிப்பு கேட்க முடியாது என்றும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், அதனை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.50 கோடி கேட்டும், திமுக எம்பி டிஆர் பாலு ரூ.100 கோடி கேட்டும் அடுத்தடுத்து அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இன்று திமுக எம்பி கனிமொழியும் ரூ.1 கோடி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
திமுக பிரமுகர்கள் அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், ஆருத்ரா விவகாரம் தொடர்பாக தன் மீது அவதூறான கருத்துக்களை கூறிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையேல் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ் பாரதி மன்னிப்பு கேட்காவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.