பிரதமர் மோடி முன்பு வெறும் பொய்யை பேசியிருக்கிறார் CM ஸ்டாலின்… திமுகதான் எங்கள் விரோதி… கடுப்பான அண்ணாமலை…!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
27 May 2022, 9:23 am

பிரதமர் மோடியின் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் வெறும் பொய்யை மட்டுமே பேசியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், அர்ப்பணித்தும் வைத்தார். திமுக ஆட்சியமைந்த பிறகு தமிழகம் வந்த பிரதமர் மோடியை பாஜகவினரோடு, திமுகவினரும் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் மேடையில் பிரதமர் மோடி அமர்ந்திருந்த போது, முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது, திராவிட மாடல் இதுதான் என்பதை பிரதமருக்கு சொல்லிக் காட்டும் வகையில் ஆங்கிலத்திலும் அவர் பேசினார். அதோடு, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும், தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி தொகை நிலுவை ரூ.14,000 கோடி வழங்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 முக்கிய கோரிக்கை முன் வைத்தார்.

இதனிடையே, பிரதமர் மோடியின் முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய விதம், பாஜகவினரை பெரும் அதிர்ச்சிக்கும், கோபத்திற்கும் ஆளாக்கியுள்ளது. அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் முதலமைச்சர் ஸ்டாலினை வெளுத்து வாங்கியுள்ளார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு டெல்லிக்கு பிரதமர் மோடியை வழியனுப்ப நேற்று இரவு சென்னை விமான நிலையம் சென்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது :- கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு என்ன தைரியத்தில் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைக்கிறார். கச்சத்தீவை மீட்டுத்தர கோரிக்கை வைக்கும் தகுதி ஸ்டாலினுக்கு கிடையாது. எப்படி ஜிஎஸ்டி கவுன்சில் நடக்கிறது என்பது கூட தெரியாமல், முதல்வர் பேசியது தமிழகத்தை அவமானப்படுத்துவது போலாகிறது.

Annamalai Demand - Updatenews360

தமிழகத்தையும் இந்தியாவையும் பிரதமர் தரம் பிரித்து பார்த்ததில்லை. முதலமைச்சர் பேசியது அனைத்துமே பொய். முன்னுக்கு பின் முரணான தகவலை பேசிவிட்டு திராவிட மாடல் என்கிறார். ஒரு மாநில முதல்வர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு சான்று தமிழக முதல்வர் நடந்து கொண்ட விதம். பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய அரசியல் நாடகம் தமிழக சரித்திரத்தில் கரும்புள்ளி.

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு அமைச்சர்களிடமும் 200 பேரை அழைத்து வர சொல்வி, நேரு ஸ்டேடியத்தில் உட்கார வைத்துள்ளார். என்ன போட்டிக்கு வர்றீங்களா..? தமிழ் மண்ணில் இந்த நாள் வரையிலும் எந்த ஆட்சியாக இருந்தாலும் பிரதமரை மதித்துள்ளோம். எங்களின் கொள்கை அடிப்படையில் திமுக என்பது 360 டிகிரி விரோதி. முதலமைச்சரை எங்கேயும் விட்டுக் கொடுத்ததில்லை. நாளை (இன்று) மாலைக்குள் முதலமைச்சர் பேசியதற்கு பதில் கொடுப்போம். தைரியம் இருந்தால், தமிழக நிதியமைச்சர் ரூ.25,979 கோடியை தமிழக அரசு மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டியதில்லை என்று சொல்லட்டும், என கூறியுள்ளார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 690

    0

    0