24 மணிநேரமும் அண்ணாமலை புராணம் தான்… இதைச் செய்தாலே பங்காளி கட்சி நிச்சயம் உருப்படும் ; அண்ணாமலை சாடல்!!

Author: Babu Lakshmanan
9 February 2024, 5:53 pm

பாஜவுடனான கூட்டணி முறிவு தொடர்பான உண்மையான காரணத்தை எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக அரசு தமிழகத்திற்கு திட்டங்களை அளிக்காததால் தான் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து அண்ணாமலை கூறியதாவது:- ஏற்கனவே அண்ணாமலை தலைவராக இருப்பதால் கூட்டணியை முறித்து கொள்வதாக ஒரு அறிக்கையை அனுப்பினார்களே. கட்சி நிர்வாகிகளை வைத்து தீர்மானம் நிறைவேற்றி அறிக்கை கொடுத்தார்களே, அது உண்மையா..? இப்போது கூறுவது உண்மையா…? என எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும். அப்போது, ஒன்று கூறி, இப்போது ஒன்று கூறுவதால் அதிமுகவினரிடமே இது தொடர்பாக கேட்க வேண்டும், என கூறினார்.

மேலும் செல்லாக்காசுக்கு எல்லாம் பதில் கூற முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்த கேள்விக்கு, 5 முறை அமைச்சர், 7 முறை எம்எல்ஏ என கூறுபவர்கள் காலை முதல் இரவு வரை எந்நேரமும் அண்ணாமலை, அண்ணாமலை என தமது பெயரையே கூறி வருவதாக சாடினார்.

தொடர்ந்து, பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பத்தால் மறைக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கும், இந்தியாவுக்காக பாடுபட்ட நரசிம்மராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியில் காற்று, தண்ணீர் மாசடைந்துள்ளது. இந்தியாவில் பல மசூதிகள் உள்ளன. குழந்தை ராமருக்கு ஒரு கோயில் மட்டுமே உள்ளது. கோயில் தான் பசியாறும் இடமாக உள்ளது. அயோத்தியில் கட்டப்படும் மசூதி வேகமாக கட்டப்பட்டு இஸ்லாமியர்களின் பயன்பாட்டுக்கு வர வேண்டும்.

அதிமுகவினர் காலை முதல் இரவு வரை அண்ணாமலை, அண்ணாமலை என்றே கூறி வருகின்றனர். அதற்கு பதிலாக தமிழகத்தின் பிரச்சினைகளை பேசினால், பங்காளி கட்சி நிச்சயம் உருப்படும். இளைஞர் நலன்துறை இருப்பது உதயநிதியை பிரமோட் செய்வது என்பதற்காகவே. ஏற்கெனவே நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம், என அவர் தெரிவித்தார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…