கையாலாகாத்தனத்தை மறைக்க ஏதேதோ பண்ணுகிறார்… திமுகவினரை அடக்கி வைப்பதே CM ஸ்டாலின் செய்யும் பேருதவி ; அண்ணாமலை பாய்ச்சல்!

Author: Babu Lakshmanan
1 November 2023, 10:19 am

சென்னை ; தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏதேதோ செய்து கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெருமை மிகுந்த தமிழகம் இன்று, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும் தனது பொலிவை இழந்து நிற்கிறது. தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அதில் ஒன்றுதான், தமிழகம் உருவான தினத்தை விட்டுவிட்டு, பெயர் மாற்றம் செய்த தினத்தைக் கொண்டாடுவது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று கூடப் பாராமல் தமிழகம் முழுவதும் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுகவினரை அடக்கி வைப்பதே, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்குமே தவிர தன் விருப்பத்துக்கு, நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தை மாற்றுவது அல்ல, என தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி